பழனியில் பங்குனி உத்திர திருவிழா தொடக்கம்...
பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் 3-ம் படை வீடு என்னும் சிறப்பு பெற்ற பழனி திருத்தலத்தில் ஆண்டு தோறும் பங்குனி உத்திரத் திருவிழா 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா திருஆவின்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் கொண்டாப்படும் இத்திருவிழாவில் தினசரி காலை 8.00 மணிக்கு மேல் தந்த பல்லக்கில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் முத்து குமார சுவாமி வள்ளி-தெய்வநாயகி அம்மனுடன் திருவுலா காட்சியும், இரவு 8.00 மணிக்கு மேல் வெள்ளி காமதேனு, வெள்ளி ஆட்டு கிடா, தங்கமயில், வெள்ளி யானை, தங்க குதிரை, வெள்ளி பிடாரி மயில், புதுச்சேரி சப்பரம் போன்ற வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடைபெறுகிறது.
பங்குனி உத்திரத் திரு விழாவின் 6-ம் திருநாளான ஏப்ரல் 8-ந் தேதி இரவு 6.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் துலா லக்கினத்தில் முத்து குமார சுவாமி, வள்ளி-தெய்வநாயகி அம்மன் திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு திருமண கோலத்தில் வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, கிரிவீதிகளில் திருவுலா காட்சியும் நடைபெறுகிறது. 10-ந் தேதி அன்று இரவு தங்கக்குதிரை வாகனத்தில் முத்துக்குமார சுவாமி வள்ளி - தெய்வானை திருவுலா காட்சி நடைபெறுகிறது. 11-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், 12-ந் தேதி காலை 7.20 மணிக்கு திரு ஆவினன்குடி கோவிலில் அபிஷேக ஆராதனை, 10.45 மணிக்கு சாந்து மண்டகப்படி, இரவு 11 மணிக்கு திருவிழா நிறைவு பெற்று கொடி இறக்குதல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Leave a Comment