திருவிளக்கின் மகிமைகள்


திருகார்த்திகயன்று நம் வீட்டிலோ அல்லது அருகில் உள்ள கோயில்களிலோ திருவிளக்கு பூஜை நடத்தினால், லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும். விளக்கின் ஒளி சுற்றுப்புற இருளை அகற்றுவதோடு, நம் மனதின் இருளையும் அகற்றுகிறது என்றால் அது மிகையில்லை . பூஜையறையில் வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் வாசல் தெளித்து மாக்கோலம் இட்டு, விளக்கை ஏற்றிவைத்து,வழிப்பட்டால் மகாலட்சுமி நம் இல்லத்தில் வாசம் செய்வாள் என்பது ஐதீகம்.

தீபம் ஏற்றும் முறை

எத்தகைய மேன்மை பொருந்திய , திருமகளின் அம்சமான திரு விளக்கை ஏற்றுவதற்கு முன் நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கியமான விஷயங்கள் இருகின்றன .விளக்கு ஏற்றும் முன் வீட்டின் முன்கதவைத் திறந்து வைத்து பின்புறக்கதவை சாத்தியபிறகே விளக்கேற்ற வேண்டும். பிரம்ம முகூர்தமான அதிகாலை நாலரை மணி முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்ற வேண்டும் . மாலை ஆறரை மணிக்குள் தீபம் ஏற்றுவதாலும் எல்லா வளமும், நலனும் நமக்கு கிட்டும் . விளக்கை குளிர்விக்கும் போது, பூவால் குளிர்விக்கலாம் அல்லது தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம்.. விளக்கின் ஒளி நம் வீட்டினை எப்படி பிரகாசமாக மாற்றுகிறதோ அதன் பலன் நம் மன இருளையும் அகற்றி ஒளி பெறச் செய்யும் .

விளகேற்றுவதினால் ஏற்படும் பலன்கள்

ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்

விளக்கேற்றும் திசை

கிழக்கு திசை - துன்பங்கள் நீங்கும் , குடும்பம் அபிவிருத்தி அடையும்
மேற்கு திசை - கடன் மற்றும் , தோஷங்கள் நீங்கும்
வடக்கு திசை - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி- எக்காரணம் கொண்டும் எத்திசையில் விளக்கேற்றக்கூடாது.
கோயிலில் நாம் ஏற்றும் தீபத்திற்கு நிறைய பலன்கள் உண்டு. நம்மை அறியாமல் செய்த பாவங்கள் கூட தீபத்தை தரிசிப்பதால் விலகிவிடும்.



Leave a Comment