பழனி கோயிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா...
பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா டிசம்பர் 6-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடு பழனி முருகன் கோயில்.
இங்கு ஆண்டு தோறும் திருக் கார்த்திகை தீப திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா டிசம்பர் 6-ந்தேதி மலைக்கோவிலில் காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.
தீப திருவிழா நிகழ்ச்சிகள்...
டிசம்பர் 6 -
மாலையில், சாயரட்சை பூஜையில் காப்புகட்டு
டிசம்பர் 7 -
மாலை 6 மணிக்கு சண்முகார்ச்சனையும், 6.30 மணிக்கு சண்முகர் தீபாராதனையும், 6.45 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் புறப்பாடும், இரவு 7 மணிக்கு யாகசாலையில் தீபாராதனையும், 7.30 மணிக்கு தங்கரதத்தில் சுவாமி புறப்பாடும் நடக்கிறது.
டிசம்பர் 8 முதல் 11 -
மாலையில் நடக்கும் சாயரட்சை பூஜையின் போது சிறப்பு வழிபாடு, பூஜைகளும் நடைபெறுகிறது. 6-ம் திருநாளில் நடக்கும் சாயரட்சை பூஜையின் போது, யாகசாலையில் இருந்து பரணி தீபம் கொண்டுவரப்பட்டு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும்.
டிசம்பர் 12 -
திருக்கார்த்திகை. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறப்பும், உடன் விஸ்வரூபதரிசனமும், நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜைக்கு பின்னர் சின்னக்குமாரர் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், யாகசாலையில் தீபாராதனையும் நடைபெறுகிறது. இதையடுத்து மலைக்கோவிலில் உள்ள நான்கு திக்குகளிலும் தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து மாலை 6 மணிக்கு மேல் மலைக்கோவில் முன்புறம் உள்ள தீபஸ்தம்பத்தில் தீபம் ஏற்றி சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும், திருஆவினன் குடி கோவில், பெரியநாயகி அம்மன் கோவில்களில் திருக் கார்த்திகை தீபம் ஏற்றி சொக் கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.
Leave a Comment