கார்த்திகை தீபத்தின் சிறப்புகள்....
"திருஅண்ணாமலையை நினைக்க முக்தி" அவ்வளவு சிறப்பு வாய்ந்த தலம் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில். சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாக அறியப்படும் தலம் இது. இப்படி சிறப்புகள் அதிகம் வாய்ந்த திருவண்ணாமலையில், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் ஏற்றக்கூடிய கார்த்திகை தீபம். இந்தக் கார்த்திகை மாதத்தில்தான் அண்ணாமலையார், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவனே ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம். திருவண்ணாமலையை சுற்றினாலேயே அத்தனை இன்பம்... இறைவன் அங்கு வந்து ஒளிப்பிழம்பாக வெளிப்படுகிறார். உருவ வழிபாட்டையெல்லாம் கடந்து ஞானிகள் இறுதி நிலையை அடைவது அருட்பெரும் ஜோதி வழிபாடு. அதனால், ஜோதி வழிபாடான இந்த கார்த்திகை தீபம் என்பது எல்லா வகையிலும் சிறப்பானது. இதில், பரணி தீபம் இருக்கிறது, கார்த்திகை தீபம் இருக்கிறது. பரணி தீபம் என்பது பொருள், செல்வம், சொத்து, சுகம், பதவி, பட்டம், புகழ் எல்லாவற்றையும் கொடுக்கக் கூடியது. கார்த்திகை தீபம் என்பது மோட்ச தீபம். இறைவனடி போதும், பொருள் வேண்டாம், அருள் வேண்டும் என்பது. டிசம்பர் 12 ஆம் தேதி அதிகாலையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. 12 ஆம் தேதி மாலை 6 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. எந்த தீபத்தைப் பார்க்கிறார்களோ இல்லையோ கார்த்திகை தீபத்தைப் பார்த்தாலே எல்லா வகையிலும் சிறப்பு உண்டாகும். தவிர, ஒரு தெளிவு நிலை, தீர்க்க நிலை உண்டாகும். அதனால் கார்த்திகை தீபத்தை மட்டும் அனைவரும் கண்டு தரிசிக்க வேண்டும். அது எல்லா வகையிலும் சிறப்புதரும்.
Leave a Comment