சபரிமலை கோயில் பெயர் மாற்றம்
கேரளாவில் பிரசித்த பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி சபரிமலை ஶ்ரீஐயப்ப சுவாமி கோயில் என அழைக்கப்படும் என திருவாங்கூர் தேவசம் அறிவித்துள்ளது.
திருவாங்கூர் தேவசம் போர்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பழைய பெயர் உடனடியாக மாற்றப்பட்டு சபரிமலை ஸ்ரீ ஐயப்பசுவாமி கோவில் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.
திருவாங்கூர் தேவசம் நிர்வாகத்தின் கீழ், பல்வேறு சாஸ்தா கோயில்கள் உள்ளன. அவற்றில் முக்கியமாக சபரிமலை ஶ்ரீஐயப்ப சுவாமி கோயிலில் மட்டுமே ஐயப்பன் இன்றளவும் வாழ்வதாக நம்பப்படுகிறது. அதனால், 'சபரிமலை தர்ம சாஸ்தா' என்னும் பெயரை, மாற்றி 'சபரிமலை ஶ்ரீஐயப்ப சுவாமி கோயில்' என்று புதிதாக மாற்றப்பட்டுள்ளதாகக் கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. கோயில் பெயர் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, முதல் கட்டமாக பம்பையில் இருந்து சபரிமலை ஶ்ரீஐயப்பன் கோயில் வரை உள்ள அறிவிப்பு பலகைகள் மற்றும் விளம்பர போர்டுகள் அனைத்தும் மாற்றப்பட்டு வருகின்றன.
Leave a Comment