பத்மாவதி தாயார் கோயிலில் பிரம்மோற்சவ அட்டவணை
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் பிரம்மோற்சவத்துக்கான அட்டவணை வெளியிட்டப்பட்டுள்ளது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் 26-ஆம் தேதி தொடங்குகிறது.
டிசம்பர் 4-ஆம் தேதி வரை பிரம்மோற்சவம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அட்டவணையையும், சுவரொட்டியையும் தேவஸ்தான அதிகாரிகள் திருமலையில் வெளியிட்டனர்.
பிரம்மோற்சவ அட்டவணை:
நவம்பர் 26 -
காலை - கொடியேற்றம், இரவு - சின்னசேஷ வாகனம்,
நவம்பர் 27-
காலை பெரியசேஷ வாகனம், இரவு - அன்னப் பறவை வாகனம்
நவம்பர் 28 -
காலை முத்துப் பந்தல் வாகனம், இரவு - சிம்ம வாகனம்
நவம்பர் 29 -
காலை - கல்ப விருட்ச வாகனம், இரவு - அனுமந்த வாகனம்
நவம்பர் 30 -
காலை - பல்லக்கு உற்சவம், மாலை - வசந்தோற்சவம், இரவு - யானை வாகனம்,
டிசம்பர் 1-
காலை - சர்வபூபால வாகனம், மாலை - தங்க ரதம், இரவு - கருட வாகனம்,
டிசம்பர் 2 -
காலை - சூரிய பிரபை வாகனம், இரவு - சந்திர பிரபை வாகனம்
டிசம்பர் 3 -
காலை - ரத உற்சவம், இரவு - குதிரை வாகனம்,
டிசம்பர் 4 -
காலை - பஞ்சமி தீர்த்தம், மாலை - கொடியிறக்கம், இரவு - தங்கப் பல்லக்கு வாகன சேவை ஆகியவை நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Leave a Comment