கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் உயர்வு....


கோவில் பணியாளர்களின் மாத ஓய்வூதியம் 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழக கோயில்களில் சேவை புரிந்துவரும் கலைஞர்களுக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தி, அவர்களின் திறன் உள்ளிட்டவற்றை மேம்படுத்த 5 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கோயில்களில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து இரண்டாயிரம் ரூபாயாக உயர்த்தி முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் 3 ஆயிரத்தி 700 ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நாகை எட்டுக்குடி சுப்பிரமணியசாமி கோயிலில் ரூ.95 லட்சத்தில் திருமண மண்டபம் கட்டப்படும். அதன் பின்னர் கோயில் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி காணொளிக் கடசிகளுடன் காண சிறப்பு இணையதளம் ஏற்படுத்தப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். கோயில் சிற்பிகள், அர்ச்சகர்கள், நாதஸ்வர கலைஞர்கள் வாழ்வாதாரத்திற்கு ரூ. 5கோடியில் திட்டமும், மேலும் ரூ.57 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக சேவர்த்திகள் மண்டபம், பாதுகாப்பு அறை கட்டப்படும்.

தேனி மாவட்டம் குச்சனுர் கோயிலில் ரூ. 69 லட்சம் மதிப்பீட்டில் மகா மண்டபம் கட்டப்படும்.மேலும் 241 கோயில்களில் ஒரு கால பூஜை வைப்புநிதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.



Leave a Comment