பத்மாவதி தாயார் கோவில் பவித்ரோற்சவ விழா....


திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் பவித்ரோற்சவ விழா செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருமலை- திருப்பதி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் ஆண்டுதோறும் பவித்ரோற்சவ விழா சிறப்பாக கொண்டாடப்பட்டுகிறது.
அதன்படி இந்த ஆண்டு பவித்ரோற்சவ விழா செப்டம்பர் 14-ந் தேதி தொடங்கி 16 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதில் பக்தர்கள் கட்டணம் செலுத்தி கலந்து கொள்ளலாம்.
இந்த விழாவை முன்னிட்டு ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. தொடர்ந்து 183 வகையான வாசனை திரவியங்களை கொண்டு கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

பவித்ரோற்சவ விழாவை முன்னிட்டு 3 நாட்கள் கோவிலில் நடைபெறும் கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விழாவை முன்னிட்டு வருகிற 13-ந் தேதி மாலை அங்குரார்ப்பணம், 14-ந் தேதி பவித்ரோற்சவ விழா, மற்றும் பவித்ர பிரதிஷ்டையும், 15-ந் தேதி பவித்ர சமர்ப்பணமும், 16-ந் தேதி பூர்ணாஹூதி, பவித்ரோற்சவம் நடபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Comment