திருப்பதியில் பவித்ரோற்சவம் நிறைவு
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவித்ரோற்சவ விழா நேற்று நிறைவு அடைந்தது.
திருப்பதி ஏழுமலையானுக்கு வருடாந்திர, மாதாந்திர, வாராந்திர, தினசரி உற்சவங்களின் போது ஏற்படும் குற்றம் குறைகளை நிவர்த்தி செய்யவும், கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் ஊழியர்களால் ஏற்படும் தோஷங்களை களையவும் ஆண்டுக்கு ஒருமுறை 3 நாட்கள் பவித்ரோற்சவத்தை தேவஸ்தானம் நடத்துகிறது.
அதன்படி ஆகஸ்டு 14 ஆம் தேதி பவித்ரோற்சவம் விமரிசையாக தொடங்கி 16 ஆம் தேதி நிறைவு பெற்றது. நிறைவு நாளான நேற்று ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் பவித்ரோற்சவம் நிறைவடைந்தன் அடையாளமாக ஹோமம் வளர்த்து, பூர்ண ஷூதி நடைபெற்றது. இதில் பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Leave a Comment