திருப்பதியில் ஆர்ஜித சேவை தற்காலிக ரத்து


பவித்ரோற்சவத்தை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 3 நாட்களுக்கு ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தினமும் நடக்கும் பூஜைகளில் அல்லது யாராவது தெரிந்தோ தெரியாமலோ செய்த தவறுகளுக்காகவும், தோஷங்களுக்காகவும் ஆண்டுதோறும் பவித்ரோற்சவம் நடத்தப்படுவது வழக்கம்.
அதன்படி இந்தாண்டு வருடாந்திர பவித்ரோற்சவம் நேற்று தொடங்கியது.

இதையொட்டி காலை 9 மணி முதல் 11 மணி வரை உற்சவமூர்த்திகளான தேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட மங்கள பொருட்களை கொண்டு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை வைர, வைடூரியம் அணிந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேவி, பூதேவி சமேத மலையப்பசுவாமி நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தொடர்ந்து மூர்த்திகளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், பூவராக சுவாமி கோயிலில் பவித்ர மாலை சமர்ப்பிக்கப்பட்டது. இதையொட்டி 3 நாட்களுக்கு கல்யாண உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், ஊஞ்சல் சேவை, வசந்த உற்சவம், சகஸ்கர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.



Leave a Comment