இணையதளம் மூலம் ஒரு லட்சம் பேருக்கு யோகா...
வாழும் கலையின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் முதன்முறையாக இணையதளத்தின் மூலம் தனித்துவம் வாய்ந்த சுதர்சனக் கிரியா கற்றுத் தரவிருக்கின்றார். இந்தியா முழுவதிலும் ஒரு லட்சம் பேருக்கு மேல், இந்த பயிற்சியினை மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகஸ்ட் 19 முதல் 21 வரை ஆனந்த அனுபவம் என்றழைக்கப்படும் இந்த பயிற்சி நடைபெறும்.
இந்தியா முழுவதிலும் - ஷில்லாங் முதல் மும்பை வரை, ஜம்மு முதல் சென்னை வரை 2000 க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து தோற்ற நிலையில் பங்கேற்பவர்கள் ஒன்று கூடுவர். பயிற்சி நடைபெறும் அனைத்து இணைய தள இடங்களிலும் வாழும் கலையின் ஆசிரியர் களும் தன்னார்வத் தொண்டர்களும் உடனிருப்பர்.
இணைய தளம் தவிர ஸ்ரீ ஸ்ரீயிடமிருந்து இந்த நுட்பத்தை நேரிடையாகப் பயில சுமார் 3000 பேர் பெங்களூருவிலுள்ள வாழும் கலையின் சர்வ தேச மையத்திற்கு பயணம் செய்ய இருக்கின்றனர்.
"அதிகப் பணி, குறைவான நேரம், ஆற்றலில்லாத நிலை ஆகியவையே மன அழுத்தம் ஏற்படக் காரணமாகின்றன" என்று கூறும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் "ஆனால் உங்கள் ஆற்றலை அதிகரித்துக் கொள்ள முடியும். பிராணாயாமம், தியானம் மற்றும் சுதர்சனக் கிரியா ஓர் நாளுக்குத் தேவையான ஆற்றலை அதிக அளவில் அளித்து, உங்களை மேலும் ஆக்க வளம் கொண்டவராக ஆக்குகிறது” என்கிறார்.
ஆனந்த அனுபவப் பயிற்சியின் மைல் கல்லாகிய சுதர்சனக் கிரியா என்பது ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களால் அறியப்பட்ட ஒரு சக்தி வாய்ந்த தாள லயத்துடன் அமைந்த மூச்சுப் பயிற்சியாகும். இந்த தனித்துவம் வாய்ந்த மூச்சுப் பயிற்சி நுட்பம் மன அழுத்தம், களைப்பு, கோபம், விரக்தி, சோர்வு போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் அனைத்தையும் அகற்றி சாந்தம், ஆற்றல் கவனம் மற்றும் இளைப்பாறல் ஆகியவற்றைத் தரும்.
கடந்த 35 ஆண்டுகளாக, இந்த நுட்பத்தால் பல்வேறு தரப்பைச் சேர்ந்த மக்கள் - மருத்துவர்கள், இல்லதரசிகள், தீவிரவாதிகள், தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், போர் வீரர்கள், இளைஞர்கள், வர்த்தகர்கள், சட்ட வல்லுநர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர், யூதர்கள், சமணர்கள் - மூச்சு சக்தி மூலம் மனித இனத்தை இணைக்கின்றனர்.
சுவாச நுட்பம், யோகா, பிராணாயாமம் மற்றும் தியானம் தவிர, பயிற்சியில் வாழ்வில் எத்தகைய சிரமமான நிலையையும் கையாள நடைமுறைக் கருவிகளைக் கற்பிக்கும் ஞான அமர்வுகளும் இருக்கும். பயிற்சியின் இறுதியில் பங்கேற்பவர்கள் சாந்தம், ஸ்திரம் மற்றும் ஆனந்தமான மன நிலையையும், தன்னைச் சுற்றியிருப்பவர்களுடன் நல்ல தொடர்பினையும் அடைவர்.
பிரசித்தி பெற்ற AIIMS மற்றும் NIMHANS உட்பட பல மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடை பெற்றுள்ள ஆய்வின்படி, சீராகத் தினமும் செய்யப்படும் சுதர்சனக் கிரியாவின் மூலம் கீழ்கண்ட பயன்கள் கிடைக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளது :
- இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் சீராகும்
- படபடப்பு குறையும். மருத்துவம் மற்றும் உளப்பிணி சிகிச்சைகள் பயனளிக்காத நிலையிலுள்ள தனிநபர்கள் 71 % முதல் 73 % வரையில் குணமடைந்தும், 41 % பிணி குறைந்தும் உள்ளனர்.
- மன அழுத்தம் நிறைந்த நோயாளிகள் சுதர்சனக் கிரியா பயின்ற பின்னர் ஒரு மாதத்திற்குள்ளாகவே 68 % முதல் 73 % வரையில் நோய் குறைவினை உணர்ந்திருக்கின்றனர்.
- மூன்று மடங்கு அதிக ஆழ்ந்த ஓய்வு நிறைந்த உறக்க நிலைகளை பெற்றுள்ளனர்.
- 12 வாரங்களில் நோய் எதிர்ப்பு செல்கள் மேம்பாட்டினைப் பெற்றுள்ளனர்.
சென்னை நகரில் இப்பயிற்சி 57 இடங்களில் நடைபெறும். 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் இப்பயிற்சியினை எடுத்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு
8144265265 என்னும் எண்ணிற்கு அழைக்கவும். ஊடகத் தொடர்பான கேள்விகளுக்கு 9884017767 என்ற எண்ணில் ராஜலக்ஷ்மி சுவாமிநாதனை அழைக்கவும்.
Leave a Comment