நெற்றியால் கிடைக்கும் வெற்றி... ஜோதிடம் சொல்வது என்ன?


னித வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகளை ஒருவரது நெற்றியின் அமைப்பே சொல்லி விடும் என்கிறது ஜோதிடம். நெற்றி சற்று மேடாக இருந்தால், லட்சுமியின் அருள் கிட்டும். இவர்கள் பிறந்த குடும்பமே வளம் கொழிப்பதாக இருக்கும். செல்வமும் செல்வாக்கும் நிறைந்த சூழலில் கவலையற்று வளருவார்கள். விசாலமான நெற்றி இருப்பது ஞானத்தின் சின்னமாகும். இப்படியான நெற்றி கொண்டவர்கள், கல்வி, கலைகளில் சிறந்தவர்கள். சிக்கன மனப்பான்மை அளவுக்கு மீறி இருக்கும். முப்பது வயது வரை போராட்டமான வாழ்க்கை அமையும். பிறகு திருப்பம் ஏற்படும்.

சுருக்கம் நிறைந்த நெற்றியைக் கொண்டவர்கள், சஞ்சல சுபாவம் மிகுந்தவர்களாக இருப்பார்கள். சந்தேகம் இவர்களுடைய இயல்பாக இருக்கும். எவரையும் எளிதாக நம்பமாட்டார்கள். சொந்தக் காலில் நிற்பார்கள். இவர்களுக்கு அமையும் மனைவி நேர் எதிரான குணமுடையவராக இருப்பார். குடும்ப வாழ்வில் நிம்மதியும், குழந்தைகள் மூலம் வாழ்வில் உயர்வும் உண்டு.

அடிக்கடி வியர்வை வழியும் நெற்றியை உடையவர்கள் நாவன்மை மிகுந்தவராக இருப்பர். வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள் வாசித்தல் போன்ற கலைகளில் ஒன்றை வாழ்க்கை ஆதாரமாகக் கொண்டிருப்பார்கள்.

வாழ்க்கைத் துணை

ஜாதகத்தில்  7-ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் அழகிய வாழ்க்கைத் துணை அமைவர் என்கின்றன ஜோதிட நூல்கள். 7-ம் இடத்தில் குரு இருப்பது மிகவும் விசேஷமான அமைப்பாகும். அந்த ஜாதகரின் வாழ்க்கை யோகமானதாக அமையும். செல்வம், செல்வாக்கு, புகழ், உயர்ந்த உத்தியோகம், உயர்ந்த பதவி போன்றவை ஏற்படும். அழகும், பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும். அதேநேரம் திருமணம் சற்று தாமதமாகவே நடைபெறும்.


காகம் பூக்கள் போட்டால்...

பூக்கள், பழங்கள் அல்லது ரத்தினக் கற்களை ஒரு வீட்டில் காகம் போட்டால் அந்த வீட்டில் ஆண் குழந்தை பிறக்கும். கூடு கட்ட உபயோகிக்கும் புல், குச்சி போன்றவற்றைக் கொண்டு போட்டால், பெண்மகவு பிறக்கும். மணல், நெல் போன்ற தானிய வகைகள், ஈரமான மண், பூக்கள், காய்கனிகள் கொண்டு வந்து வீட்டில் போட்டால், அந்தந்தப் பொருளின் வகையில் லாபம் ஏற்படும். வீட்டிலுள்ள பாத்திரங்களைக் காகம் எடுத்துப் போவது நன்மையன்று.

சூரியனைப் பார்த்து காகம் கரைந்தாலும், சிவந்த பொருட்கள், சிவந்த மலர்கள் ஆகியவற்றைக் கொண்டு வந்து வீட்டினுள் போட்டாலும், நெருப்பினால் துன்பம் நேரிடும். காகம் மிகவும் அமைதியாக உட்கார்ந்து கிழக்கு திசை பார்த்துக் கரைந்தால் தங்கத்தால் லாபம், நல்ல உணவு கிடைக்கும்.



Leave a Comment