ஸ்ரீ சாய்பாபா சுவாமிக்கு நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்...
ராணிப்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் உள்ளே அருள்பாலித்து வரும் வினை தீர்க்கும் விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ சாய்பாபா சுவாமிக்கு நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இதில் முன்னதாக நேற்று இரவு வேத பண்டிதர்கள், மந்திரங்கள் ஓத அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்டவை பல்வேறு ஹோமங்கள் யாகசாலையில் நடைபெற்றது தொடர்ந்து இன்று அதிகாலை இரண்டாம் கால யாகசாலை பூஜை, யஜமானர்கள் சங்கல்பம் பூர்ணாஹீதி யாகம் உள்ளிட்டவை யாகசாலையில் வைக்கப்பட்டு பூஜை செய்த கலசமானது ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை முழுவதும் வலம் வந்து விமான கோபுர கலசத்திற்கு பல்வேறு பூ மலர்களை கொண்டு சிறப்பு பூஜைகள் செய்து நூதன அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக நடைபெற்ற பின்னர் விமான கலசத்தில் மேலே தண்ணீரை ஊற்றி மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து கலசத்தின் மீது ஊற்றப்பட்ட புனித நீரை கோவில் வளாகத்தின் வெளியே இருந்த திரளான பக்தர்கள் மீது தெளிக்கப்பட்ட பின்னர் கருவறையில் உள்ள வெள்ளைக்கல் பதித்த ஸ்ரீ சாய்பாபா திருவுருவ சிலைக்கு கும்பாபிஷேக தண்ணீர் மற்றும் பால் அபிஷேகங்களை செய்து தீபாராதனை காட்டப்பட்டது..
இந்த கும்பாபிஷேக விழாவில் ராணிப்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
Leave a Comment