வீட்டில் செய்யக்கூடாத செயல்கள்...
அன்னம், உப்பு, நெய் இவைகளை எப்போதும் நம் வெறும் கையினால் பரிமாறக் கூடாது. அவ்வாறு செய்வது மாமிசத்தை பரிமாறுவதற்கு சமமாகும். இதனால் வீட்டில் தரித்திர நிலை உண்டாகும்.
இரவு நேரங்களிலும், வீட்டில் பூஜை செய்து முடித்த உடனேவும் வீட்டை பெருக்கி சுத்தம் செய்ய கூடாது. இவ்வாறு செய்வதால் வீட்டில் இருக்கும் லட்சுமி வெளியே சென்று தரித்திர நிலை மட்டுமே நிலைத்திருக்கும்.
அதேபோல் வீட்டை பெருக்கி குப்பைகளை வீட்டின் மூலை முடுக்குகளில் சேர்த்து வைக்கக் கூடாது. இதுவும் ஒரு வகையான தரித்திர நிலையாகும்.
எவருக்கேனும் பணம் கொடுக்கும் பொழுது வாசற்படிக்கு வெளியே நின்று கொடுக்கக்கூடாது. அவ்வாறு செய்வதால் உங்களின் அதிர்ஷ்டம் மற்றவர்களுக்கு சென்று விடும்.
வீட்டில் அத்தியாவசிய பொருட்களான உப்பு, பருப்பு, பால் போன்றவை எப்பொழுதும் குறையாமல் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அவற்றை குறைய விட்டாலும் தரித்திரம் உண்டாகும்.
இவ்வாறான உங்களின் அன்றாட செயல்களை சரிவர மாற்றிக்கொண்டால் உங்கள் வீட்டில் உள்ள தரித்திர நிலை நீங்கி பணம் பெருகிக் கொண்டே இருக்கும்.
Leave a Comment