ஸ்ரீ ராமானுஜரின் 1006 ஆவது திரு நட்சத்திர உற்சவ விழா...
ஸ்ரீ ராமானுஜரின் 1006 ஆவது திரு நட்சத்திர உற்சவ விழா...
ஸ்ரீ ராமானுஜரின் 1006 ஆவது திரு நட்சத்திர உற்சவ விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. தமிழகத்தின் வைணவம் தலைதூங்க வைத்தவர் மடாலயங்களை ஏற்படுத்தி இறைபணியின் ஈடுபட்ட ராமானுஜருக்கு இந்தியாவிலேயே முதன்முறையாக சேலத்தில் சுமார் 6 கோடி மதிப்பில் 2 1/2 ஏக்கர் பரப்பளவில் 85 அடி உயர ராஜகோபுரத்தில் 74 மடாதிபதிகளை குறிக்கும் வகையில் 74 தூண்கள் அமைக்கப்பட்டு ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் எருமாபாளையம் பகுதியில் ஸ்ரீ பகவத் ராமானுஜருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்தில் தமிழ் மாதங்களில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தாலும் ஸ்ரீ பகவத் ராமானுஜரின் 1006 ஆவது திரு நட்சத்திர உற்சவ வைபவம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது காலை 7 மணி முதல் சுப்ரபாதம் கோ பூஜை விஸ்வரூப சேவை உள்ளிட்டவைகள் மற்றும் திருவாராதனம் நடைபெற்றன தொடர்ந்து ஸ்ரீ ராமானுஜர் உற்சவமூர்த்திக்கு நவ கலச ஸ்தபன விசேஷத் திருமஞ்சனம் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
தொடர்ந்து பல்வேறு வாசனை மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது பின்னர் ராமானுஜர் நூற்றந்தாதி பாராயணம் நடைபெற்றது பின்னர் 18 அடி உயரத்தில் உள்ள ராமானுஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன பட்டாச்சாரியார்கள் வேதங்கள் முழங்க மங்கள வாத்தியம் இசைக்க அர்ச்சனைகள் நடைபெற்றது தொடர்ந்து இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ராமானுஜருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது ராமானுஜரின் திரு நட்சத்திர உற்சவத்தை காண பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.
Leave a Comment