பெண்களுக்கு அனுமதியில்லை கேரளா முருகன் கோவிலில் ஏன்?
கேரளா மாநிலம் திருச்சூர் அருகில் உள்ள கிடங்கூர் கிராமத்தில் உள்ள சுப்பிரமணி சுவாமி கோயிலில் ,முருகன் பிரம்மச்சாரியாக அருள்புரிகிறார். இங்குள்ள சன்னதிக்கு செல்ல பெண்களுக்கு அனுமதி இல்லை.சூரசம்ஹாரம், முருகன் பிரம்மச்சாரியாக இருந்த பொது தான் செய்தார். கந்த சஷ்டியை ஒட்டி இங்கு சென்று வரலாம்.
பிரம்மச்சாரியான கவுன மகரிஷி,வனமாக இருந்த இப்பகுதியில் தவம் செய்து வந்தார். ராவணவதத்ற்காக சென்ற ராமபிரான்,திரும்பி வரும்போது கவுன மகரிஷியை சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால் ,அவர் வரவில்லை.சீதையுடன் ஊர் திரும்பும் மகிழிச்சியில் ,தன்னை ராமன் மறந்து விட்டதாக கருதிய அவர்,இல்லறத்தில் அவர் இருப்பதால் தான் இத்தகைய இக்கட்டான நிலைமை ஏற்ப்பட்டதாக கருதினார்.
இந்த மகரிஷிக்கு முருகன் இஷ்ட தெய்வமாக இருந்தார். ராமனிடம் கோரிக்கை வைத்து நிறைவேறாததால், முருகபெருமானின் தரிசனம் வேண்டி கோரிக்கை வைக்க நினைத்தார்.அவருக்கு இரண்டு மனைவிகள் என்பதால் தன் கோரிக்கைகள் கவனிப்பாரோ மாட்டாரோ எனக் சந்தேகப்பட்டார். அந்த சந்தேகத்துடனேயே முருகனுக்குஒரு சிலை வடித்தார். பிரம்மச்சாரி முருகன் என இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து விட்டார்.
பரசுராமர் உருவாக்கிய ஊர் கிடங்கூர். இக்கோவிலில் பெருமான் சன்னதி இருக்கிறது. முருகன் சன்னதிக்கு எதிரே கோடி மரம் ,பலி பீடம் உள்ளது. கேரளா கோயில்களிலேயே இது தான் மிக உயரமான கொடி மரம். கொடி மரத்தின் மேல் ஒரு மயில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இங்குள்ள கூத்தம்பலம், மருத்துவ குணமாக கொண்ட குறுந்தோட்டி என்ற மரத்தினால் உருவாக்கப்பட்டது. கூத்தம் பலத்தின் உள்ளே புவேனேஸ்வரி அம்மன் அருள் செய்கிறாள். இவளுக்கு , செவ்வாய், வெள்ளியில் குருதி பூஜை நடக்கிறது. வழக்குகளில் ஜெயிக்கவும், தொழில் போட்டியை சமாளிக்கவும் ,எதிரிகளின் ஆதிக்கத்தை தடுக்கவும் இந்த பூஜையில் பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பெண்களுக்கு அனுமதில்லை இல்லறத்தில் இருப்பவர்களால் எதிலும் கவனம் செலுத்த இயலாது என்ற கருத்தின் அடிப்படையில் கவுன மகரிஷி பிரம்மச்சாரி முருகன் சிலையை பிரதிஷ்டை செய்ததால் முருகன் சன்னதிக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. கொடி மரம் அருகே நின்று தரிசிக்கலாம். ஒரு சில தம்பதிகள் குழந்தை வரம் வேண்டி இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.அவர்களும் தம்பதி சமேதராக முருகன் சன்னதிக்குள் செல்ல முடியாது.
கணவன் மட்டுமே உள்ளே செல்ல, மனைவி கொடிமரம் அருகில் நின்று குழந்தை வரம் கேட்கலாம்.குழந்தை பிறந்த பிறகு இத்தலத்தின் முக்கிய பிரார்த்தனையான ‘பிரம்மச்சாரி கூத்து’ நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். ஆண்கள் சட்டை அணிந்து செல்லக் கூடாது. உடல் நலம் வேண்டி பஞ்சமிர்த அபிஷேகமும், திருமணத்தடை நீங்க சுயம்வர அர்ச்சனையும் செய்யப்படுகிறது.
முருகனுக்கு துலாபாரம்,காவடி,சுட்டுவிலக்கு ஏற்றியும், பெருமாளுக்கு பால்பாயசம் அப்பம் படைத்தும் வணங்குகின்றனர். கந்த சஷ்டியை ஒட்டி இந்த கோவிலுக்கு சென்று வரலாம்.
Leave a Comment