காஞ்சி ஏகாம்பரநாதர் கோயிலில் 3500 ஆண்டுகள் பழமையான தெய்வீக மாமரம் மீண்டும் மாங்காய்கள் காய்க்க தொடங்கியது...


பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள சுமார் 3500 ஆண்டுகள் பழமையான தெய்வீக மாமரத்தில்  மீண்டும் மாங்காய்கள் காய்க்க தொடங்கியது. இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு ஆகிய நால்வகைச் சுவைகளை கொண்ட இம் மாமரத்தில் மாங்கானிகள் காய்த்துள்ளதை வியந்து பார்த்து‌ தெய்வீக மாமரத்தினை பக்தர்கள் வணங்கிச் செல்கின்றனர்.

கோவில் நகரமான காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப்பெற்றதும்,பஞ்ச பூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கின்ற  பழமையான காஞ்சி ஸ்ரீ  ஏகாம்பரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இத்திருக்கோயிலில் மூலவர் ஏகாம்பரநாதர் மணல் லிங்கமாக காட்சியளிக்கிறார். இவரது மேனியில் அம்பாள் கட்டியணைத்த தடம் தற்போதும் இருக்கிறது.

பல்வேறு சிறப்புமிக்க  இந்த கோயிலில் ஸ்தல விருட்சம் ஆக தெய்வீக மாமரம் ஒன்று உள்ளது. சுமார் 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த தெய்வீக  மாமரம் கோவில் கருவறைக்கு பின்புற பிரகாரத்தில் உள்ளது. இந்நிலையில் சுமார் 3500 ஆண்டுகள் பழமையான இந்த தெய்வீக  மாமமரம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பட்டுப் போனதை தொடர்ந்து உயிரியல் துறை நிபுணர்கள் மூலம் மீண்டும் இந்த மரம் உயிரூட்டப்பட்ட நிலையில் சில ஆண்டுகளாக இந்த மாமரத்தில் மாங்காய்கள் காய்த்து வருகின்றன.



Leave a Comment