தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மருதமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம்...


கோவையில் உள்ள மருதமலை ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் சித்திரை 1 தமிழ் புத்தாண்டு 18 வகையான பழங்கள் கொண்டு அலங்காரம் மக்கள் தரிசனம்.

 சித்திரை முதல் நாள் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்று வருகிறது காலை முதல் அனைத்து கோயில்களிலும் பொதுமக்கள் வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக பிரசித்திப்பெற்ற கோவை மருதமலை முருகன் கோவிலில் 18 வகையான பழ வகைகளை கொண்டு மற்றும் முருகப்பெருமானுக்கு தங்க கவசங்களை கொண்டு அலங்காரம் செய்து ராஜ அம்சத்தோடு காட்சியளிக்கிறார்.

கோவை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து வந்த  பக்தர்கள் காலை முதல் முருகனை தரிசித்து வருகின்றனர் இதனைத் தொடர்ந்து மண்டல கால பூஜைகள் நடைபெற உள்ளதுஅதன் தொடர்ச்சியாக கோவில் நிர்வாகம் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவதையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மருத்துவ வசதிகளும் செய்து வைத்துள்ளனர் மேலும்  வரும் அனைவருக்கும் பொதுமக்கள் சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது.

மேலும் அதிக படியான மக்கள் வருவதை ஓட்டி இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் சிறிது தூரத்திற்கு முன்பாகவே தடுத்து நிறுத்தப்பட்டு வாகனங்களை நிறுத்த காவல்துறையினர் அறிவுறுத்தினர் எதற்காக தற்காலிக வாகன நிறுத்துமிடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



Leave a Comment