தேய்பிறை நாட்களில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது ஏன்?
கிருஷ்ண பட்சம் என்றால் தேய்பிறை காலம். பௌர்ணமிக்கு அடுத்த நாள் வரும் பிரதமையிலிருந்து அமாவாசை வரை வருகின்ற 15 நாட்களை கிருஷ்ண பட்சம், அதாவது, தேய்பிறை காலம் என்று அழைக்கிறோம்.
தேய்பிறை என்பது தேய வேண்டும். அதாவது நோய் விலக வேண்டும், தீர வேண்டும். அதற்காகத்தான் தேய்பிறை. கடன் வாங்குவது, கடன் அடைப்பதற்கு தேய்பிறை நல்லது. விவாதங்களில் ஈடுபட்டு வெற்றி பெறவும் தேய்பிறை நல்லது.
தேய்பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதனால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு. நாள், நட்சத்திரம் பார்த்து நல்ல காரியம் செய்யும் பொழுது அவற்றின் தலைவனாகிய சந்திரன் வளர்பிறையாக அதாவது பலமுள்ளவனாக இருக்க வேண்டும். அதனால் தான் தேய்பிறையில் நல்ல காரியங்கள் செய்யக்கூடாது என்கிறார்கள்!
Leave a Comment