தீப ஒளியில் ஜொலித்த அயோத்தி!
அயோத்தியில் தீபமேற்றி உலக சாதனை!
தீபாவளியை ஒட்டி,உத்தர பிரதேச மாநிலம்,அயோத்தியில் உள்ள சரயு நதி ஆர்த்தி விழாவில், 1. 87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு,புதிய உலக சாதனை படைக்கப்பட்டது.
தீபங்களின் திருவிழா என்று சொலப்படும் தீபாவளி அன்று தான், 14 வருடங்கள் வனவாசம் மேற்கொண்ட ராமபிரான்,அயோத்தி மாநகருக்குத் திரும்பினார் என்கிறது ராமாயணம். அந்த நாளில் நகர மக்கள் தங்கள் வாழ்வில் வெளிச்சம் வந்து விட்டதாக கூறி, விளக்குகளை ஏற்றி வைத்து, ராமபிரானை பிரம்மாண்டமாக வரவேற்றனராம். அதனை நினைவூட்டும் வகையில் ,தீபாவளியின் பொது அயோத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
தீபாவளியன்று மாலை,அயோத்தில் உள்ள சரயு நதி ஆர்த்தி விழாவில்,அமைச்சர்கள் புடை சூழ, முதல்வர் யோகி ஆதித்யாநாத் பங்கேற்றார். நிகழ்ச்சியில் , அம்மாநில கவர்னர், ராம் நாயக்கும் பங்கேற்றார்.
ராமன்,சீதை,லட்சுமணன் வேடமணிந்தவர்களுக்கு ,முதல்வர் யோகி மற்றும் கவர்னர்,மாலை அணிவித்து,திலகமிட்டு ஆர்த்தி எடுத்து வரவேற்கின்றனர். பின், ராமகதா பூங்காவில் நடந்த நிகழ்ச்சியில், முதல்வர் உரையாற்றினர். ஆர்த்தி விழாவுக்காக சரயு நதிக்கரை முழுவதும், 14 ஆயிரம் லிட்டர் எண்ணெய் மூலம், 1.87 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.
தீபமேற்றும் விழாவில் 50 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்ட பொது மக்களும் மற்றும் மாணவர்கள் பங்கேற்றினர். விழாவின் போது, மிகப்பெரிய விளக்கும் ஏற்றப்பட்டது. இந்த தீபமேற்றும் விழா ,கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு முன் 2016 ல் பாபா ராம் ரஹீம் பெயரில் பதிவான உலக சாதனை நிகழ்ச்சியில், 1.50 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டது.
தீபாவளியன்று தீப ஒளியில் ஜொலித்த அயோத்தி பார்ப்பதற்கு மிக அழகாக காட்சியளித்தது.
Leave a Comment