பெருந்தேவி தாயார், வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாண வைபோகம்...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை வெங்கட்ரமண பாகவதர் தெருவில் மிகவும் பழமையான ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸமேத அருள்மிகு வரதாரஜ பெருமாள் திருக்கோவிலில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு பெருந்தேவி தாயார் வரதராஜ பெருமாளுக்கு திருக்கல்யாணம் வைபோகம் நேற்றிரவு திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இதனையொட்டி முன்னதாக காலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்று மூலவர், உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பான முறையில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றதை தொடர்ந்து கோவிலில் உள்ளே பக்தர்கள் மங்கள வாத்தியம் முழங்க சீர் வரிசை பொருட்களை கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.
பிறகு கணபதி ஹோமம், மகாபூர்ணவதி, பல்வேறு யாகங்கள் வளர்க்கப்பட்டு ஸ்ரீ பெருந்தேவி தாயார் ஸமேத வரதராஜ பெருமாளுக்கு மாலை மாற்றும் வைபோகமும் வேத மந்திரம் முழங்க ஹோமங்கள், காப்பு கட்டுதல், உள்ளிட்டவை நடைபெற்று மேளதாளங்கள் முழங்க மாங்கல்ய தாரணம் என்று சொல்லக்கூடிய திருக்கல்யாணம் நடந்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது இந்த திருகல்யாண வைபோகத்தில் வாலாஜாபேட்டை சுற்றுவட்டார பகுதியில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
Leave a Comment