காட்டேரியம்மனுக்கு இரவில் நடந்த வினோத திருவிழா....


ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே உள்ள பென்னகர் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ கட்டேரி அம்மனுக்கு வெகு விமர்சையாக வினோத திருவிழா நடைபெற்றது.

இந்த திருவிழாவானது ஊரின் நன்மைக்காவும், பொதுமக்கள், கால்நடைகள்,  நோய்நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும், அதோடு சுமார் 300 வருடங்களுக்கு முன் ஊரில் பலருக்கு நோய்வாய்ப்பட்டு இறந்து உள்ளனர் அப்பொழுது காட்டேரியம்மனுக்கு திருவிழா வைத்து வழிபட்டதால் அனைவருக்கும் நோய்க்கு குணமடைந்ததாக தெரிகிறது.இதனால் தோன்று தொட்டு இத்திருவிழா நடைபெற்று வருகிறது..

முன்னதாக ஊர் பொதுமக்கள் தங்கள் நிலத்தில் விளைந்த தானியங்களை கொண்டு பொங்கல் வைத்து படையல் செய்து வழிபடுவதாகவும் தாங்கள் இந்த காட்டேரி அம்மனை மனம் உருகி நினைத்தது நடந்து விட்டால் கோழி, ஆடு ஆகியவை பலியிட்டு வழிபாடு செய்தனர்‌.

தொடர்ந்து பம்பை உடுக்கை மூலம் பாடல் பாடி வழிபட்டபோது ஆக்ரோசமாக பெண்ணின் மீது வந்த காட்டேரியம்மன் ஊரின் வளர்ச்சிக்காக வாக்குறுதியும் வழங்கியது  இத்திருவிழாவில் பென்னகர் கிராம சுற்றியுள்ள மாம்பாக்கம், வேம்பி, தோனிமேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment