ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருகோவில் தேர்த்திருவிழா...
பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் திருகோவில் தேர்த்திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா.. அரோகரா.. என விண் அதிர தேரை வடம் பிடித்து இழுத்தனர்
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை பூக்கார தெருவில் அமைந்துள்ள சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த காமாட்சி அம்பாள் சமேத ஏகாம்பரநாதர் ஈஸ்வரர் திருகோவிலில் பங்குனி மாத பிரம்மோற்சவம் கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்களாக காலை,மாலை என இருவேளைகளிலும் மூலவர் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
இந்த நிலையில் 7-ம் நாளான இன்று தேர்த்திருவிழாவில் காமாட்சி அம்பாள் ஏகாம்பரநாதர் சுவாமிக்கு வண்ண மலர்களால் தொடுக்கப்பட்ட மாலைகளை கொண்டு அலங்கரித்து, சிவமேளம் செண்டைமேளம் ,கேரளா மேளம், நாதஸ்வரம் உள்ளிட்ட மேலதாளங்கள் முழங்க வானவேடிக்கைகளுடன் முக்கிய வீதிகளின் வழியாக வீதியுலா சென்று அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா.. ஆரோகரா.. அரோகரா.. என பக்தி பரவசத்துடன் தேர் ரதத்தை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
Leave a Comment