சேலம் எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பூமிதி வைபவம்...


சேலம் அருள் மிகு எல்லைப்பிடாரி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி பூமிதி வைபவம் வெகு விமர்சியாககொண்டாடப்பட்டது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கினி குண்டத்தில் இறங்கி நேர்த்திகடனை அம்மனுக்கு செலுத்தினர்.  

சேலம் குமாரசாமி பட்டி பகுதியில் மிகவும் பழமையான மற்றும் பிரசித்திபெற்ற அருள் மிகு ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இந்த திருக்கோவிலில்  பங்குனி மாத திருவிழா நடைபெற்று வருகிறது கோவிலில் பூ சாட்டுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி பொங்கல் வைத்தல், அலகு குத்துதல் என பல்வேறு வகையான வைபவம் நடைபெற்றது.

முன்னதாக பூமிதி விழாவையொட்டி அம்மனுக்கு அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.  பின்னர் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர் நேர்த்திகடன் வேண்டி கொண்ட பக்தர்கள் குழந்தை பாக்கியம் பெறவும்,  குடும்பத்தில் சந்தோசம் நிலவவும் திருமணதடை நீங்கவும் என பல்வேறு வகையான வேண்டுதல் நிறைவேற்றி தந்த அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில்  இன்று பக்தர்கள் அம்மன் ஊர்வலத்தில் கலந்துகொண்டு அக்கினி குண்டத்தில் இறக்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்றனர்.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த அக்கினி குண்டம் இறங்கும் வைபவத்தின் முடிவில் அம்மனுக்கு சிறப்பு  அர்ச்சனை செய்யப்பட்டு மஹாதீபாராதனை காண்பிக்கப்பட்டது.  இதனை தொடர்ந்து வைபவத்தில் கலந்துக்கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



Leave a Comment