பவழக்கால் சப்பரத்தில் ஏலவார்குழலியோடு எழுந்தருளிய ஏகாம்பரநாதர்.... அற்புத வீடியோ காட்சி...


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவில் பிரம்மோற்ச்சவத்திற்கான கொடியேற்றம் இன்று அதிகாலை நடைபெற்ற நிலையில் பவழக்கால் சப்பரத்தில் ஏகாம்பரநாதர் ஏலவார்குழலியோடு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பு.

பஞ்சபூத ஸ்தலங்களில் மண் ஸ்தலமாக விளங்கக்கூடிய புகழ் பெற்ற சிவ ஸ்த்தலங்களுள் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்ச்சவத்திற்கான கொடியேற்று பெருவிழா இன்று காலை நடைபெற்றது.

இதில் சிவச்சாரியர்களின் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றமானது நடைபெற்றது. அதனையெடுத்து ஏகாம்பரநாதரும்,ஏலவார்குழலியும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தூப, தீப ஆராதனைகள் காட்டப்பட்டு இப்பிரம்மோற்ச்சவத்தின் முதல் நாளில் காலை பவழக்கால் சப்பரத்தில் ஏகாம்பரநாதரும்,ஏலவார்குழலி அம்மையாரும் எழுந்தருளி பின்னால் விநாயகர்,வள்ளி தெய்வயானையோடு முருக பெருமான்,சண்டிகேஸ்வரர் அணிவகுத்து ஒன்றன் பின் ஒன்றாக நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு எழுந்தருளி காட்சியளித்தனர்.

இதனை காண வழிநெடுகிலும் ஏர்ளமான பக்தர்கள் கண்டு முனமுறுகி ஓம் நமச்சிவாய முழக்கமிட்டபடி கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கி வழிபட்டனர். இப்பிரம்மோற்ச்சவ விழாவின் 6-ஆம் நாளான இம்மாதம் 31ஆம் தேதி காலை 63 நாயன்மார்கள் வீதிவுலாவும்,இரவு வெள்ளித்தேரோட்டமும் நடக்கிறது .மறுநாள் ஏப்ரல் மாதம் முதல் தேதி திருவேகம்பம் சிவாலய அறக்கட்டளை சார்பில் மகாரதம் எனும் தேரோட்டம் நடைபெறுகிறது.

அதனைதொடர்ந்து இவ்விழாவின் முக்கிய நிகழ்வான  ஏகாம்பரநாதருக்கும்,ஏலவார்குழலிக்கும் திருக்கல்யாணம் வரும் ஏப்ரல் 5-ஆம் தேதி அதிகாலை நடைபெற்று பின்னர் ஏப்ரல் மாதம் 8-ஆம் தேதி 108 கலசாபிஷேகத்துடன் பிரம்மோற்ச்சவ விழா நிறைவு பெறுகிறது.



Leave a Comment