காஞ்சிபுரம் ஸ்ரீ கோமளவல்லி நாயிகா சமேத யதோத்தக்காரி சுவாமி பெருமாள் திருக்கோயில் பங்குனி பிரம்மோற்சவம்....
ஆறாம் நாளான இன்று வேணுகோபாலன் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி -பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் சப்பரத்தில் எழுந்தருளி திருவீதி உலா. கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவச கோஷங்களுடன் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள ஸ்ரீ கோமளவள்ளி நாயிகா சமேத ஸ்ரீயதோத்தகாரி சுவாமி பெருமாள் திருக்கோயிலில் பங்குனி பிரம்மோற்சவம் கடந்த 16ந் தேதியன்று கொடியேற்றதுடன் வெகு விமரிசையாக துவங்கியது.அதையொட்டு அனுதினமும் காலை மாலை என இருவேளைகளில் பெருமாள் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.
இந்நிலையில் பிரம்மோற்சவத்தின் 6ம் நாளான இன்று காலை வேணுகோபாலன் திருக்கோலத்தில் ஸ்ரீதேவி -பூதேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் சப்பரத்தில் எழுந்தருளி, திருகச்சி நம்பி தெரு,செட்டி தெரு வழியாக வரதராஜ பெருமாள் கோயில் வரை திரு வீதி உலா சென்று மீண்டும் ஆலயத்தில் எழுந்தருளினார்.
வழி நெங்கிலும் ஏராளமான பொதுமக்களும்,பக்தர்களும் திரு வீதி உலா வந்த பெருமாளை கோவிந்தா கோவிந்தா என பக்தி பரவச கோஷமிட்டு கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து பயபக்தியுடன் வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து பெருமாளின் பேரருளைப் பெற்றுச் சென்றனர்.
Leave a Comment