ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் உண்டில் காணிக்கை எண்ணும் பணி....
திருநள்ளாரில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ சனிபகவான் ஆலயத்தில் உண்டில் காணிக்கை எண்ணும் பணி இன்று துவங்கியது. இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள்.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த திருநள்ளாரில் உள்ள உலக புகழ் பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் ஆலயத்தில் நாடுமுழுவதிலிருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். குறிப்பாக சனிக்கிழமைகளில் லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இங்குள்ள உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை மூன்று மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம் அந்த வகையில் இந்த கோயிலில் உண்டியல் எண்ணும் பணி மூன்று கட்டங்களாக நடைபெறும் அதன்படி இன்று முதல் கட்டமாக உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் உண்டியல் எண்ணும் பணிகளை கோவில் நிர்வாகம் சார்பில் சிசிடிவி கேமரா மூலம் கண்காணித்து வருகின்றனர்.
Leave a Comment