கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடிய ஸ்ரீ ஹயக்ரீவர்....
காஞ்சீபுரத்தில் தவம் இருந்த அகத்தியரை பாராட்ட அவர் முன் ஹயக்ரீவர் தோன்றினார் என்று பிரமாண்ட புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சுவாமி தேசிகருக்கு, ஹயக்ரீவர் எந்த கோலத்தில் காட்சி கொடுத்தாரோ, அதே கோலத்தில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவஹீந்திரபுரத்தில் காட்சி அளிக்கிறார்.
புத்த மதத்தில் 108 வகையான ஹயக்ரீவர்கள் இருப்பதாக வும் அவர்கள் தோல் நோய்களை தீர்ப்பவராகவும் நம்புகிறார்கள். குதிரை போல கனைத்து இவர் அசுரர்களை விரட்டியதால் திபெத் நாட்டு குதிரை வியாபாரிகள் ஹயக்ரீவரை தங்கள் காவல் தெய்வமாக வழிபட்டதாக புத்தமதத்தில் கூறப்பட்டுள்ளது.
அனுமன் தூக்கிக் கொண்டு போன சஞ்சீவி மலையில் இருந்து விழுந்த ஒரு சிறுபகுதி மலைதான் தற்போது ஹயக்ரீ வர் வசிக்கும் திருவந்திபுரம் என்று கூறப்படுகிறது. ஹயக்ரீவர்தான் லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்தவராவார்.
ஸ்வாமி தேசிகன், வாதிராஜ ஸ்வாமிகள் ஆகியோர் ஸ்ரீஹயக்ரீவரை ஆராதித் து நீடித்த புகழ் பெற்றனர். சங்கு, சக்கரம், புத்தகம், மணிமாலை, சின்முத்திரை, தரித்தவராக லட்சுமி தேவி யோடு கூடியவராகத் திகழ்கிறார் ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவர்.
வேதங்களின் கரைகண்டவன் நான் என்ற செருக்குப் கொண்ட பிரம்மாவின் கர்வத் தை அடக்குவதற்காக மது கைடபர்களைத் தோற்றுவித்த மஹாவிஷ்ணு அவர்கள் மூலம் வேதங்களைப் பிரம்மாவிடமிருந்து கவர்ந்து மறைத்து வைத்தார்.
நான் முகனின் பிரார்த்தனைக்குத் செவி சாய்த்து மீனாக அவதரித்து மது கைடபர்களைக் கொன்று வேதங்களை மீட்டு, பின்னர் வெள்ளைப் பரிமுகனாகத் தோன்றி அவ்வேதங்களைத் தூய்மைப் படுத்தி நான்முகனுக்கு உபதேசித்தார்.
தேசிகனுக்கு பரத்யட்சமாகக் காட்சி தந்தது போலவே மதகுருவான ஸ்ரீவாதிரா ஜருக்கும் காட்சி தந்தருளியவர். நன்றாக வேக வைத்த கடலைப் பருப்பு, துருவிய தேங்காய், வெல்லம் சேர்த்து, நெய்விட்டுக் கிளறிய "ஹயக்ரீவபண்டி'' இந்த ப்ரஸாதத் தை ஒவ்வொரு திருவோண நட்சத்திரத்த ன்றும் செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்வது விசேஷம்.
கேட்டவற்றை உடனே அளிக்கக்கூடியவர் ஸ்ரீ ஹயக்ரீவர். குதிரை முகத்தையுடைய வராக மகாலட்சுமியை இடது பக்கம் மடி மேல் இருத்திக் கொண்டுள்ள, தூய்மை யான ஸ்படிகம் போன்ற உடலையுடைய, தாமரை மலர் மேல் அமர்ந்துள்ள ஸ்ரீஹயக்ரீவ வரை மனத்தில் தியானித்து, ஹயக் ரூவ பஞ்ஜர ஸ்தோத்திரத்தைக் கூறுபவர்களுக்கு எல்லாக் கஷ்டங்களும் நீங்கி விரும்பியது யாவும் கிடைக்கும்.
குழந்தைகளைப் படிப்பில் மேன்மை அடையச் செய்யும். இதைக் கூறுவதற்கு நியமநிஷ்டைகள் கிடையாது. உச்சரிப்பில் தவறு நேர்ந்தாலும் மன்னிப்பார். இதை எல்லோரும் நாள்தோறும் ஒருதடவையாவது கூறி எல்லா வளமும் பெறலாம்.
Leave a Comment