அரசு காரியங்களில் ஈடுபட உகந்த திதி... வைத்தியம் செய்ய உகந்த திதி....
தசமி திதி
எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு தொழிலில் விரயங்கள் ஏற்படும்.வாக்குப்பலிதம் உடையவர்.கொடுத்த வாக்கை காப்பாற்ற நினைப்பவர்.தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கும்.இனிப்பு வகைகளை விரும்பி உண்பார்கள்.போட்டிகளில் வெற்றி பெறுவார்கள்.இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.
ஏகாதசி திதி
விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம்.ஆடை ஆபரணம் செய்யலாம்.வாஸ்து சாந்தி செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு அரசியலில் ஆர்வம் இருக்கும்.தந்தை வழி ஆதாயம் இருக்கும்.திருமண வாழ்வில் ரகசியம் இருக்கும்.இருதார தோஷம் இருக்கும்.உதவி செய்வதில் ஆர்வம் இருக்கும்.ஏகாதசி விரதத்தை கடைபிடிப்பது மிகவும் நல்லது.இதற்கு, ருத்ரன் அதிதேவதை.
துவாதசி திதி
தனம் தானியங்கள் சம்பாதிக்கலாம்.சுபச் செலவுகள் தர்ம காரியங்கள் செய்யலாம்.நிலையுள்ள மற்றும் நிலை இல்லாத காரியங்கள் திருவோணம் நட்சத்திரம் வரும் நாள் தவிர்த்து செய்யலாம்.மதச்சடங்குகளில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஏமாற்றம் உண்டு.கல்வியில் ஆர்வம் இருக்கும்.சுறுசுறுப்பாக இருப்பார்.தன்னை அழகு படுத்திக் கொள்வதில் ஆர்வமாக இருப்பார்.இறுதிக்கால வாழ்க்கை செல்வச் செழிப்பாக இருக்கும்.சுய தொழிலில் ஏமாற்றத்தைச் சந்திப்பார்கள்.கவனம் தேவை. அதிதேவதை விஷ்ணு.
திரயோதசி திதி
சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் வாக்கால் தொழில் செய்வார்கள். பொருளீட்டுவதில் குறியாக இருப்பார்கள்.வாகன தொழில் சிறப்பாக இருக்கும்.உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தந்தை மீது பாசம் உள்ளவராக இருப்பார்.குலதெய்வ வழிபாட்டில் ஆர்வம் அதிகம் இருக்கும். திரயோதசி திதிக்கு அதிதேவதை மன்மதன்.சிவபக்தராக இருப்பார். வெகு காலங்கள் நிலைத்திருக்க வேண்டிய மங்கள காரியங்கள் செய்யலாம்.
சதுர்த்தசி திதி
பல் சம்பந்தப்பட்ட வைத்தியம் செய்யலாம். மாமிசம் சாப்பிடலாம். யாத்திரை செல்லலாம். ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த திதி.வளர்பிறையில் மட்டும் திருமணம் போன்ற சுப காரியங்கள் செய்யலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் காதல் விஷயங்களில் ஆர்வம் உடையவராக இருப்பார்.மதம் இனம் மாறிய காதல் உண்டாகும். விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.அதிகமாக உழைக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.வேலை செய்யும் இடத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.தந்தையால் பிரச்சனை ஏற்படும்.பணம் சம்பாதிப்பது நோக்கமாக இருக்கும்.மண வாழ்வில் பிரச்சனைகளை சந்திப்பார்கள். காளி இந்த திதிக்கு அதிதேவதை.
பௌர்ணமி திதி
ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம்.போர் செய்வதற்கு வேண்டிய காரியங்கள் செய்யலாம்.தேவதை பிரதிஷ்டை செய்யலாம்.தோஷ பரிகாரங்கள் செய்யலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரம் நன்கு அமையும். அழகானவராக இருப்பார். பேச்சாற்றல் உடையவராக இருப்பார்.சுய ஜாதகத்தில் சூரியன் சந்திரன் பரிவர்த்தனையில் இருந்தால் சிறப்பு. கலைத்துறைகளில் ஆர்வம் இருக்கும்.மகான்கள் மற்றும் சித்தர்கள் வழிபாட்டில் ஆர்வம் இருக்கும். யோகக் கலையில் ஆர்வம் இருக்கும்.கார உணவுகளை விரும்பி உண்பார். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை.
அமாவாசை திதி
பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு 40 வயதிற்கு மேல் யோகம் உண்டாகும்.சுய உழைப்பால் முன்னேறுவார். தனிமையை விரும்புவார். சமையல் கலையில் ஆர்வம் இருக்கும். இருதார தோஷம் இருக்கும்.வாக்குப்பலிதம் உள்ளவர். ஜோதிடம் நன்கு சித்திக்கும். இரவில் கண்விழித்து வேலை செய்பவர்களாக இருப்பார்கள்.அடுத்தவர்களுக்கு அறிவுரை சொல்வதில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள்.சிவன், சக்தி அதிதேவதை.
Leave a Comment