திருநின்றவூர் பக்தவத்சலப்பெருமாள் தங்க கருட சேவை....


திருநின்றவூர் பக்தவத்சலப்பெருமாள் திருக்கோயில் 1432 பசலி பிரம்மோத் ஸசவம் திருவிழா தங்க கருட சேவை கோபுர தரிசனம். ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருநின்றவூர் பக்தவத்சலப்பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்று இந்த கோவிலில் மாசி பங்குனி  மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் வெகு விமர்சியாக நடைபெறுவது வழக்கம்.இந்தாண்டும் கடந்த வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் பிரம்மோத்சவம் தொடங்கி மூன்றாம் நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை தங்க கருட வாகனத்தில் பக்தவச்சல பெருமாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

அதிகாலை 05:30  மணியளவில் கோவிலில் இருந்து பிரம்மாண்ட அலங்காரத்துடன் கருடன் மீது அமர்ந்து வெளியே வந்த பெருமாள் கோவில் எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதி அருகே பிரம்மாண்ட அலங்காரத்துடன்  தன்னைக் காண வந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர் நான்கு மாட வீதிகளிலும் சுவாமி தங்க கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது. இந்த கருட சேவை விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  இந்த விழாவுக்கான சிறப்பு பாதுபகாப்பு  ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் சிறப்பாக செய்திருந்தனர்.



Leave a Comment