மயில் தோகை இறகை கொண்டு காமாட்சிம்மன் திருவுருவம் வடிவமைக்கப்பட்டு அழகிய காட்சி...


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் மாசி பிரம்மோற்ச்சவம் நிறைவு பெற்றது. 4அடி உயரமும் 3அடி அகலத்துடனும் கூடிய காமாட்சியம்மன் உருவம் முழுவதும் 1500 மயில் தோகை இறகில் 1வார காலம் 5தொழிலாளர்களை கொண்டு அற்புதமாய் வடிவமைக்கப்பட்டதனை ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்து சென்றனர்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கடந்த பிப்ரவரி 25ந் தேதியன்று கொடியேற்றத்துடன் மாசி மாத பிரமோற்சவம் துவங்கியது. அதையொட்டி தினசரி காலை மற்றும் மாலை என இரு வேளையிலும் காமாட்சி அம்மன் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு  ராஜவீதிகளில் திரு வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.மேலும் இதில் பிரபல உற்சவங்களாக மார்ச் 3 ஆம் தேதி தேரோட்டமும், 5 ஆம் தேதி வெள்ளித் தேரோட்டமும், 6 ஆம் தேதி  தீர்த்தவாரி உற்சவமும் நடைபெற்று பிரம்மோற்சவ விழாவின் நிறைவு நாளான இன்று அதிகாலையில் விஸ்வரூப தரிசனமும்,மாலையில் பக்தி இன்னிசை நிகழ்ச்சியோடும் விழா முழு நிறைவு பெற்றது.

இந்த நிறைவு நாளையொட்டி கோவில் வளாகத்தில் மயில் தோகை இறகில் 4அடி உயரமும்,3அடி அகலமுடைய  காமாட்சியம்மன் திரு உருவமானது வடிவமைக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. மூலவர் காமாட்சியம்மனை போன்றே அதே மாதிரியாக அழகுற வடிவமைக்கப்பட்ட இந்த திரு உருவமானது 5பணியாளர்கள் கொண்டு 1வார கால வேலைபாட்டினால் ரூ.25ஆயிரம் மதிப்பில் செய்யப்பட்டிருப்பட்டிருக்கிறது.

காமாட்சி அம்மன் திருஉருவம்  மயில் தோகை இறகை கொண்டு அழகுற வடிவமைக்கப்பட்டு அதே மயில் இறகை கொண்டே மாலையும் அணிவிக்கப்பட்டு அவற்றில் வண்ண வண்ண கற்கள் பதிக்கப்பட்டு கண்களை கவரும் வகையில் அதை பார்த்தாலே கைகளை தூக்கி வணங்கக்கூடிய வகையிலே அமைந்திருக்கிறது.

கோவில் வளாக பகுதியில் வைக்கப்பட்டுள்ள இந்த மயில் இறகுகளிலான காமாட்சியம்மனை ஏராளமான பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து புகைப்படங்கள் எடுத்து சென்றனர்.



Leave a Comment