காஞ்சிபுரம் காமாட்சியம்மன் தங்க காமகோட்டி விமானத்தில் வீதி உலா....


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவில் பிரம்மோற்ச்சவத்தின் 11-ஆம் நாள் இரவு தங்க காமகோட்டி விமானத்தில் காமாட்சியம்மன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

மாசி மாத பிரம்மோற்சவத்தின் 11-ஆம்  நாள் இரவு காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, பச்சை மற்றும் ரோஸ் நிற பட்டு உடுத்தி,வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க,வைர திருவாபரணங்கள் அணிந்துக்கொண்டு சிறப்பு அலங்காரத்தில் தங்க காமகோடி விமானத்தில் எழுந்தருளிய காமாட்சியம்மன் திருக்கோவிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்த வீதியுலாவில் ஜண்டா மேள இசைகள்,தவில் நாயணம் குழுவினரின் வாத்தியங்கள்,சின்னஞ்சிறு பள்ளி மாணவ,மாணவியர்கள் பங்கு கொண்ட சிலம்பாட்டங்களுடன் நடைபெற்றது.இந்த சிலம்பாட்டம் குழுவில் கோள் சுற்றுதலில் கோல் அளவுக்கு கூட இல்லாத போடீசுகள் கோல் சுற்றி அசத்தியது பார்ப்போரையே மெய்சிலிர்க்க வைத்தது.அதே போல் மாணவிகள் வால் வீச்சில் நடத்தி அசத்தினர்.

இவ்வுற்ச்சவத்தையொட்டி வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து வீதியுலா வந்த காமாட்சி அம்பாளை  வேண்டி விரும்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து  வழிபட்டு அம்பாளின் பேரருளை பெற்றுச் சென்றனர்.



Leave a Comment