வெள்ளி மாவடி சேவையில் காஞ்சி காமாட்சியம்மன் வீதியுலா...
காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்ச்சவத்தின் 10-நாள் விழா இரவு வெள்ளி மாவடி சேவையில் காஞ்சி காமாட்சியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பு
முக்தி தரும் நகரம்,புண்ணிய நகரம்,நகரேஷு காஞ்சி என உலகளவில் பல பெயர் பெற்று விளங்கின்ற கோவில் நகரமான காஞ்சிபுரத்தில்,உலகப் பிரசித்தி பெற்றதும்,மகா சக்தி ஸ்தலங்களில் முதன்மையான வற்றில் ஒன்றானதுமான காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ திருவிழாவானது கடந்த பிப்பிரவரி மாதம் 25ந் தேதியன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கி நடைபெற்று வருகிறது.
மாசி மாத பிரம்மோற்சவத்தின் 10-ஆம் நாள் இரவில் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிகப்பு மற்றும் பச்சை நிற பட்டு உடுத்தி,வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தங்க,வைர திருவாபரணங்கள் அணிந்துக்கொண்டு சிறப்பு அலங்காரத்தில் வண்ண வண்ண மலர்கள்,பலூன்களால் அலங்கரிகக்ப்பட்ட வெள்ளி மாவடி சேவையில் எழுந்தருளிய காமாட்சியம்மன் திருக்கோவிலிருந்து புறப்பட்டு நான்கு ராஜவீதிகள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இவ்வுற்ச்சவத்தையொட்டி வழிநெடுகிலும் திரளான பக்தர்கள் காத்திருந்து கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து வீதியுலா வந்த காமாட்சி அம்பாளை வேண்டி விரும்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்து வழிபட்டு அம்பாளின் பேரருளை பெற்றுச் சென்றனர்.
Leave a Comment