எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ள வாஞ்சிநாத சுவாமி ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு தர்ப்பணம்...


பிரசித்தி பெற்ற எமதர்மனுக்கு தனி சன்னதி உள்ள வாஞ்சிநாத சுவாமி ஆலயத்தில் மாசி மகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கனோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம்.

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே ஸ்ரீவாஞ்சியம் என்கிற சிற்றூரில் பிரசித்தி பெற்ற மங்களாம்பிகை சமேத ஸ்ரீ வாஞ்சிநாத சுவாமி ஆலயம் உள்ளது.இந்தியாவிலேயே எங்கும் இல்லாத வகையில் இந்த ஆலயத்தில் எமதர்மர் மற்றும் சித்திர குப்தருக்கு என்று தனி சன்னதி உள்ளது இந்த ஆலயத்தின் தனி சிறப்பு.இந்த ஆலயத்தில் வழிபட்டால் ஆயுள் விருத்தி கூடும் என்பது நம்பிக்கை அதன் அடிப்படையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொது மக்கள் வந்து வழிபடுவது வழக்கம்.

இந்தநிலையில் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் தீர்த்த குளமான குப்த கங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு குளக்கரையின் கரையோரத்தில் மறைந்த தங்கள் ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு திதி கொடுத்து தர்ப்பணம் செய்தனர்.முன்னதாக புனித குப்த கங்கையில் பொதுமக்கள் நீராடி விட்டு பின்னர் தர்ப்பணம் கொடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து மதத்தில் வருடத்திற்கு ஒரு முறை முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். அவ்வாறு திதி கொடுக்க தவறியவர்கள் மாசிமகம் அன்று ஸ்ரீவாஞ்சிநாத சாமி ஆலயத்தில் உள்ள குப்தகங்கையில் நீராடி தர்ப்பணம் செய்தால் புண்ணியம் கிடக்கும் என்பது நம்பிக்கை.

அதன் அடிப்படையில் இந்த ஆலயத்தில் ஏராளமான ஆண்கள் பெண்கள் என ஆயிரக்கணக்கானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.பச்சரிசி காய்கறிகள் கீரை ஆகியவற்றை தானமாக வழங்கி எள் பச்சரிசியில் பிண்டம் பிடித்து குப்த கங்கையில் தர்ப்பணம் விட்டு முன்னோர்களை வணங்கினர். இங்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக திருவாரூர் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகத்தில் இருந்து பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான ஆண்கள் பெண்கள் என தர்ப்பணம் செய்தனர்.



Leave a Comment