குமரி வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி பெருந்திருவிழா தேரோட்டம்...


குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாசி பெருந்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது-இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சுவாமி தேரின் வடம் பிடித்து இழுத்து  தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஒன்று வடிவீஸ்வரம் அழகம்மன் சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலாகும், இக்கோவிலில் வருடம் தோறும் மாசி மாசம் பெருந்திருவிழா நடப்பது வழக்கம்,அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் 25ஆம் தேதி வடிவீஸ்வரம் அழகம்மன் கோவிலில் கொடியேற்றம் நடைபெற்றது,அதனை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் மூன்றாம் நாள் மக்கமார் சந்திப்பு,சுவாமி வீதி உலா வருதல் இப்படி ஒவ்வொரு நாட்களும் திருவிழாவில் சிறப்பு பூஜைகள், சிறப்பு வாகன ஊர்வலம், கலை நிகழ்ச்சிகள்  நடைபெற்றது. இந்நிலையில் திருவிழாவில் ஒன்பதாவது நாளான முக்கிய நிகழ்வான தேர்திருவிழா இன்று நடைபெற்றது.

இதில் அழகம்மன்  சமேத சுந்தரேஸ்வரர் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்,பின்னர் தேரை பொதுமக்களும் ஏராளமான பெண்களும் வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர்,இதில் சுற்றுவட்டார பகுதி சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Leave a Comment