அகஸ்த்தீஸ்வரர் கோவிலில் மாசி மாத மஹா சனிபிரதோஷ விழா....


வன்னிவேடு கிராமத்தில்  அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி ஸமேத அகஸ்த்தீஸ்வரர் கோவிலில் மாசி மாத மஹா சனிபிரதோஷ நாளில் நந்தி பகவானுக்கு பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடைபெற்று பூ மலர்களால் அலங்கரித்த பிரதோஷ நாதரை பக்தர்கள் தோளில் சுமந்துபடி வணங்கிச் சென்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வன்னிவேடு கிராமத்தில் ஷடாரன்ய சேத்திரத்தில்  அமைந்துள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஸமேத அகஸ்த்தீஸ்வரர் கோவிலில் கொடிமரம் முன்பாக உள்ள நந்தி பெருமானுக்கு மாசி மாதத்தையோட்டி மஹா சனி பிரதோஷத்தில் பால், விபூதி, மஞ்சள்பொடி, கதம்பொடி, சீக்காய் திரவிய பொடி, பஞ்சாமிர்தம், இளநீர், கரும்பு சாறு, தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகப் பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, சிவாச்சாரியர் வேத மந்திரங்கள் முழங்க பக்தர்களால்  வழங்கப்பட்ட பூ மாலை அருகம்புல், தாமரை, வில்வ இலை, மலர்கள் இவற்றை எல்லாம் மாலையாக  நந்திபெருமானுக்கு அலங்காரம் செய்து மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பல்வேறு வகையான பூ மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பிரதோஷ நாதரை சிவாச்சாரியார்கள் மற்றும் பக்தர்கள் ஆகியோர் தோளில் சுமந்தபடி நமச்சிவாய நமச்சிவாய, நமச்சிவாய ஒம் சிவாய போற்றி ஓம் என பல்வேறு பக்தி கோஷங்களை எழுப்பி  கோவிலை வலம் வந்து வழிபட்டனர் பின்னர் கோவில் கருவறையில் உள்ள புவனேஸ்வரி ஸமேத அகஸ்த்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மஹா தீபாரதனை காண்பிக்கப்பட்டது  இந்த சனி பிரதோஷ விழாவில்  உள்ளூர் மற்றும் வெளியூரிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டு சென்றனர்.



Leave a Comment