பஞ்சமி திதியில் என்ன செய்யலாம்... அஷ்டமி திதியில் என்ன செய்ய கூடாது...?


பஞ்சமி திதி

எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும்.இந்தத் திதியில் பிறந்தவர்கள் படிப்பில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.குலதெய்வ அனுக்கிரகம் இருக்கும்.எளிதில் காதல் வயப்படுவார்கள்.நிறைய ஏமாற்றங்களை சந்திப்பார்கள்.கடன் பிரச்சனை இருக்கும்.சொத்துக்கள் இறுதிக்காலத்தில் அமையும்.குழந்தைகள் மேல் பிரியமாக இருப்பார்.இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.பஞ்சமி திதியில் செய்யும் காரியங்கள் வெகு காலம் நிலைத்திருக்கும் நண்பர்களே.

சஷ்டி திதி

சிற்ப,வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம்.பசுமாடு வீடு வாகனம் விலைக்கு வாங்கலாம்.மருந்து உட்கொள்ளலாம் தயாரிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் அரசியலில் ஈடுபாடு உள்ளவர்களாக இருப்பார்கள்.சாணக்கியத்தனமும்,தந்திரமும் இருக்கும்.முன்கோபம் உடையவராக இருப்பார்.சுகவாழ்வை  விரும்புவார்.இதற்காக எந்த எல்லைக்கும் போவார்.வீடு வண்டி வாகன யோகம் உண்டு.கடன் பிரச்சனை இருக்கும்.வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருக்கும்.நொறுக்குத் தீனியை விரும்பி உண்பார்.இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும் நண்பர்களே.

சப்தமி திதி

பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம்.வீடு கட்டலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் தாயாருடன் கருத்து வேறுபாடு உடையவர்களாக இருப்பார்.பேச்சுத் திறமை உள்ளவர்களாக இருப்பார்.கூட்டுத் தொழில் சிறக்கும்.மனைவி வழி ஆதாயம் உண்டு.வலிமையான உடல் அமைப்பு உள்ளவர்.வீடு வண்டி வாகனங்கள் அமைவதில் தாமதம் உண்டாகும்.இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும் நண்பர்களே.

அஷ்டமி திதி

பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம்.யுத்தம் செய்யலாம்.இந்த திதியில் பிறந்தவர்கள் போராட்ட குணம் இருக்கும்.போராட்டமான வாழ்க்கையும் அமையும் அதில் வெற்றியும் பெறுவார்கள்.காதல் மற்றும் காம உணர்வுகள் அதிகம் இருக்கும்.மண வாழ்வில் நிச்சயம் பிரச்சனை இருக்கும்.சொத்து பிரச்சனைகள் உண்டாகும்.அதிகமாக விபத்துகளைச் சந்திப்பார்கள்.ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை நண்பர்களே.

நவமி திதி

சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம்.போர் செய்யலாம்.பகைவர்களை சிறை பிடிக்கலாம்.இந்த திதியில் பிறந்தவர்களுக்கு தந்தை மகன் கருத்து வேறுபாடு இருக்கும்.பொருளாதார பிரச்சனை இருக்கும்.அழகான தேகம் உடையவர்களாக இருப்பார்கள்.நேர்மையை கடைப்பிடிப்பார்கள்.அதுவே இவர்களுக்கு பிரச்சனையாகவும் இருக்கும்.குளிர் உணவுகளை அதிகம் விரும்புவார்.வழிபாடுகளில் ஆர்வம் இருக்கும்.இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை நண்பர்களே.

 



Leave a Comment