தங்க பல்லக்கில் எழுந்தருளிய காமாட்சியம்பாள்...


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் மாசி மாத பிரம்மோற்ச்சவத்தின் 5ம் நாளான இன்று  காலை தங்க பல்லக்கில் காமாட்சியம்பாள் எழுந்தருளி நான்கு ராஜ வீதிகளில் திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

சக்தி பீடங்களில் ஒன்றானதும், உலகப் பிரசித்தி பெற்றதுமானதும் கோவில் நகரமான  காஞ்சிபுரம் மாநகரில் அமைந்துள்ள காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் மாசி மாதம் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது .

பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று  காலை பட்டு உடுத்தி, திருவாபரணங்களுடன், பல்வேறு மலர் மாலைகள் சூடி  காஞ்சி காமாட்சியம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் மேள தாளங்கள்,பேண்டு வாத்தியங்கள் முழங்க, காஞ்சிபுரம் மாநகரின் நான்கு ராஜ வீதிகளில் தங்க பல்லக்கில்   காமாட்சியம்பாள் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.

தங்க பல்லக்கில் வலம் வந்த காமாட்சி அம்பாளை  வழிநெடுங்கிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள்  சாமி தரிசனம் செய்து கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து வேண்டி விரும்பி காமாட்சியம்பாளை வணங்கி வழிபட்டுச்சென்றனர்.



Leave a Comment