மகர ராசிக்கு மார்ச் மாத ராசிபலன்...


மகரம்:

கிரகநிலை:

ராசியில்  சனி  - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சூரியன்  - தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு, சுக்ரன் - சுக ஸ்தானத்தில் ராகு  - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய்  - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது  என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றங்கள்:

09-03-2023அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

13-03-2023 அன்று சுக்ர பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

14-03-2023 அன்று செவ்வாய் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

15-03-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

29-03-2023அன்று புதன் பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.  

பலன்:

சொல்லாற்றலும் செயலாற்றலும் பெற்ற மகர ராசியினரே இந்த மாதம் பணவரத்து இருக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வீண் மன குழப்பங்களை தோன்றினாலும் முடிவில் தெளிவு உண்டாகும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக கிடைக்கும். வீண் கனவுகள் தோன்றும். திடீர் கோபம் தோன்றலாம். மிகவும் கவனமாக பேசுவது நன்மை தரும்.

தொழில், வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும்போது நிதானத்தை கடை பிடிப்பது நல்லது. தொழில் முன்னேற்றம் தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டி இருக்கும். பணி சுமை காரணமாக திடீர் கோபம் உண்டாகலாம். கவனமாக செயல்படுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கிடைக்கலாம்.

குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு சரியாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன், மனைவிக்குள் கருத்து வேற்றுமை ஏற்படலாம். உங்கள் செயல்களை குடும்பத்தில் உள்ளவர்கள் குற்றம் சொல்லலாம். எனவே வாக்குவாதத்தில் ஈடுபடாமல் கண்டும் காணாமல் செல்வது நன்மை தரும். பிள்ளைகளின் எதிர்கால நலனில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பெண்களுக்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை தவிர்ப்பது நன்மை தரும்.

கலைத்துறையினருக்கு வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.

அரசியல்துறையினருக்கு காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். சக மனிதர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.

மாணவர்களுக்கு நிதானத்தை கடை பிடிப்பது வெற்றிக்கு உதவும். பாடங்களை கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்லது.

உத்திராடம்:

இந்த மாதம் திருமணத்திற்கு வரன் தேடுவோர் வரக்கூடிய வரன்களை நன்றாக ஆராய்ந்து முடிவுக்கு வரவேண்டும். தொழிலதிபர்கள் வெளிநாட்டு ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். லாபம் பெருகும். வியாபாரிகள் போட்டியின்றி வியாபாரம் செய்து லாபத்தைப் பெறுவார்கள்.

திருவோணம்:

இந்த மாதம் பிரிந்துசென்ற தம்பதியினர் ஒன்றுசேர்வார்கள். நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். குடும்பத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. மருத்துவத் தொழில்புரிவோருக்கு அதிக வருவாய் வரும் நாள். சோதனைகள் வெற்றியாக மாறும்.

அவிட்டம்:

இந்த மாதம் காரியங்கள் அனைத்தும் கைகூடும். உங்கள் செயல்பாடுகள் மற்றவர்களைக் கவரும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் செல்லும். மனஅடக்கம் பெற தியானம் செய்யுங்கள். படிப்பில் நாட்டம் கூடும். பெற்றோர்கள், பிள்ளைகள் விரும்பியதை  வாங்கிக்கொடுப்பார்கள். செலவுகளும், அலைச்சலும் கூடும்.

பரிகாரம்: சனிக்கிழமையில் சனிபகவான், விநாயகரை வழிபடுவது எல்லா காரியங்களும் நன்றாக நடக்க உதவும். கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
சந்திராஷ்டம தினங்கள்: 6, 7
அதிர்ஷ்ட தினங்கள்: 26, 27

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

 



Leave a Comment