திருநறையூர் ராமநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்....
சனி பகவான் குடும்ப சமேதராய் உள்ள ஒரே தலமான கும்பகோணம் அருகே திருநறையூர் ராமநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்கள் இசைக்க சிறப்பாக நடைபெற்றது ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே திருநறையூர் கிராமத்தில் பர்வத வர்த்தினி சமேத ராமநாத சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது திருக்கோயிலில் சனி பகவான் மந்தாதேவி ஜெஷ்ட்டா தேவி என இரு மனைவிகள் மாந்தி குளிகன் என இரு மகன்களுடன் காக்க வாகனம் கொடிமரம் பலி பீடங்களுடன் தனி சன்னதி கொண்டு மங்கள சனி பகவானாக அருள் பாலித்து வருகிறார்.
இவ்வாலயத்தில் உலக மக்கள் நலம் பெற வேண்டி தசரத சக்கரவர்த்தி வழிபாடு செய்துள்ளார் அதேபோல் ராமபிரானும் ஆலயத்தில் வழிபாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது பல்வேறு சிறப்புடைய இத்திருக்கோவில் 18 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் கடந்த இருபதாம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கியது நான்கு கால யாக பூஜைகள் நடைபெற்று மகாபூர்ணாஹூதிக்கு பின்பு மங்கள வாத்தியங்கள் முழங்க கடம் புறப்பாடு செய்யப்பட்டு விமான கலசங்களுக்கும் கோபுரங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மூலஸ்தானத்தில் உள்ள ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் மங்கள சனீஸ்வர பகவானுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு தீபாரதனை கட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment