ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு கும்ப படையல்...
காஞ்சிபுரம் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு ஐந்தாம் நாளில் நடைபெற்ற கும்ப படையல் வெகு விமர்சையாக நடைபெற்றது.
கோவில் நகரமான காஞ்சிபுரம் மான்கரில் பிரசித்திப்பெற்ற பெரிய காஞ்சிபுரம் பட்டனத்தார் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாசி மாத மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்தாண்டு மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஐந்தாம் நாள் விழாவில், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் கும்ப படையலானது பல வகையான அசைவ உணவுப் பொருட்களைக் கொண்டு அம்மனுக்கு படையல் இட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு பொதுமக்கள் அம்மனை வழிபட்டனர்.
மேலும் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் சிவன், பார்வதி, விநாயகர், முருகர் வடிவத்தில் ஆனந்த தாண்டவ காட்சி மலர் அலங்காரங்களால் மற்றும் ஆபரணங்களைக் கொண்டு சிலை வடித்து பொதுமக்கள் பிரமிப்புடன் கண்டு மகிழ்ந்து சிவன் பார்வதி ஆனந்த தாண்டவ கோலத்தைக் கண்டு தீபாரதனை காண்பித்து பொதுமக்களின் வேண்டுதலை நிறைவேற்றி சிவபெருயானின் அருள் பெற்று சென்றனர்.
பின்பு அம்மனுக்கு கும்ப படையலிட்ட பின்பு அம்மன் பிரசாதத்தினை ஏராளமான பக்தர்கள் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர். மேலும் ஆலயத்தில் பக்தர்களுக்கென வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அசைவ உணவுகளை வாங்கி உண்டு மகிழ்ந்தனர்.
Leave a Comment