திருப்பனந்தாளில் ஒரே நாளில் ஐந்து கோயில்கள் பாலாலயம்...


திருப்பனந்தாளில் ஒரே நாளில் ரூ 50 லட்சம் மதிப்பில் ஐந்து கோயில்கள் பாலாலயம் காசி மடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் முன்னிலையில் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருப்பனந்தாளில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான பெரியநாயகி அம்பாள் உடனாய அருணஜடேஸ்வரர் ஆலயம் உள்ளது. கடந்த மாதம் இவ்வாலயம் ரூ. 3 கோடி மதிப்பில் திருப்பணி செய்ய தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் பாலாலயம் நடைபெற்று திருப்பணி தொடங்கப்பட்டது.

இதனை ஒட்டி தேரோடும் வீதிகளில் உள்ள காசி மடத்துக்கு சொந்தமான வீரியம்மன் ஆலயம், விநாயகர் கோயில், காசி விஸ்வநாதர் கோயில், அய்யனார் கோயில், வீரன் கோயில் ஆகிய ஐந்து கோயில்களுக்கும் ரூ.50 லட்சம் மதிப்பில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு அதன் பாலாலய நிகழ்ச்சி இன்று நடைபெற்றது காசி மடத்து அதிபர் எஜமான் சுவாமிகள் முன்னிலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்று கடங்கள் எடுத்துவரப்பட்டு புனித நீர் ஊற்றப்பட்டு முகூர்த்த கால்கள் நடப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.



Leave a Comment