காஞ்சி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் மயான கொள்ளை திருவிழா...
காஞ்சிபுரத்திலுள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தின் 140ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடம்பு முழுவதும் எலுமிச்சை குத்தியும்,அலகு குத்தியும்,காளி வேடம் அணிந்துக்கொண்டும் நேர்த்திகடனை செலுத்தினர்.
கோவில் நகரமான காஞ்சிபுரம் மாநகரில், பெரிய காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே அங்காளம்மன் தெருவில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயத்தில் ஆண்டுதோறும் மாசி மாதம் அமாவாசை அன்று மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று 140 ஆம் ஆண்டு மயான கொள்ளை திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.அதையொட்டி கோவிலில் மக்காச்சோளம், ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துகொடி, அண்ணாச்சி, செவ்வாழை போன்ற பழங்களால் கோவிலின் மடம் அலங்கரிக்கப்பட்டது.மேலும் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பகதர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார்.அதன் பின் மயான கொள்ளை திரு விழாவை முன்னிட்டு ஆலயத்தில் இருந்து ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் புறப்பட்டு ஜவஹர்லால் தெரு, செங்கழு நீரோடை வீதி, பூக்கடை சத்திரம், காமாட்சி அம்மன் சன்னதி தெரு வழியாக ஊர்வலமாக வந்து பழைய ரயில்வே நிலையம் அருகே திருவீதி உலா வந்து நிறைவு பெற்றது.வழியெங்கும் பக்தர்கள் அம்பாளுக்கு தீபாரனை சமர்ப்பித்து வழிபட்டனர்.மேலும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் தங்களது உடம்பு முழுவதும் எலுமிச்சம்பழம் குத்தியும், அலகு குத்தியும், வித விதமாக காளி வேடமணிந்தும், பேண்ட் வாத்தியங்கள் முழங்க குத்தாட்டம் போட்டு ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
Leave a Comment