மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா....
உலக புகழ் பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைப்பெற்ற மயான கொள்ளை திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மேல்மலையனூரில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலும் ஒன்று.
இக்கோவிலில் மாதந்தோறும் அமாவாசை விழா நடைபெறுவது மட்டுமல்ல, ஆண்டு தோறும் மாசி மாதம் மாசி பெருவிழா 13 நாட்கள் நடைப்பெறும் அதன் படி இந்த ஆண்டிற்கான மாசி பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிவபெருமானின பிரம்மஹத்தி தோசத்தை நீக்கிய தலம் என்பது கோவில் வரலாறு.
விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மயான கொள்ளை திருவிழா இன்று நடைப்பெற்றது. அதனை தொடர்ந்து முக்கிய திருவிழாவான இன்று திருதேரோட்டம் நடைப்பெற்றது. ஆலயத்தில் இருந்து சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய அங்காளம்மன் மயான காளியாய் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அங்காளம்மன் மயானத்தை நோக்கி சென்ற போது ஏராளமான பக்தர்கள கோழிகளை கடித்தவாறு அருள் வந்து ஆடியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது காய்கள், கனிகள், பழ வகைகள், மலர்கள், நாணய ரூபாய் நோட்டுகள் ஆகியவைகளை அம்மன் மீது வாரி இரைத்து பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். மேலும் ஆண்களும், பெண்கள், திருநங்கைகள் உட்பட அம்மன், காளி, குறத்தி, போன்ற தெய்வங்கள் திரு உருவங்களை போன்று வேடமணிந்தும், தீச்சட்டி ஏந்தியும், தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த விழாவினை காண விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னைம் காஞ்சிபுரம், சேலம், உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா போன்ற மாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டனர்.
Leave a Comment