ஐந்து சிவராத்திரிகள்...
மகா சிவராத்திரி :
மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளே மகா சிவராத்திரியாகும். இந்த சிவராத்திரிக்கு "வருஷ சிவராத்திரி" என்ற பெயரும் உண்டு.
யோக சிவராத்திரி :
திங்கட்கிழமையன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல், இரவு சேர்ந்த அறுபது நாழிகை (இருபத்தி நான்கு மணி)யும் அமாவாசை இருந்தால் அன்று யோக சிவராத்திரி ஆகும்.
நித்திய சிவராத்திரி :
வருடத்தின் பன்னிரெண்டு மாதங்களிலும் வரும் தேய்பிறை, வளர்பிறை சதுர்த்தசி திதி இடம் பெறும் இருபத்தி நான்கு நாட்களும் நித்திய சிவராத்திரி ஆகும்.
பட்ச சிவராத்திரி :
தை மாத தேய்பிறை பிரதமை அன்று தொடங்கி, பதின்மூன்று நாட்கள் தினந்தோறும் முறைப்படி ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்த்தசி அன்று முறைப்படி விரதம் இருப்பது பட்ச சிவராத்திரி எனப்படும்.
மாத சிவராத்திரி :
மாதந்தோறும் அமாவாசைக்கு முன்தினம் வரும் சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.
Leave a Comment