ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் தங்க கருட வாகனத்தில் திருவீதி உலா...


காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி பிரசித்திபெற்ற ஸ்ரீ விஜயராகவப்பெருமாள் கோவில்  பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாள் விழாவில் இன்று தங்க கருட வாகனத்தில் உற்சவர் விஜயராகப்பெருமாள் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.

வழி நெடுங்கிலும் திரண்டிருந்த திரளான பகதர்கள் கோவிந்தா கோவிந்தா என பக்தி கர கோசங்கள் எழுப்பி கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து  விஜயராகப்பெருமாளை சாமி தரிசனம் செய்து வழிப்பட்டு சென்றனர்.

கோயில் நகரமான காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், குழந்தைப்பேறு அருளும் திருத்தலமாகவும் விளங்குகின்ற ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த இரு தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கி அனுதினமும் காலை மாலை என இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் உற்சவர் விஜயராகவப் பெருமாள் எழுந்தருளி திரு வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்து வருகிறார்.

இந்நிலையில் பிரம்மோற்சவ  விழாவின் மூன்றாம் நாளான இன்று முக்கிய நிகழ்வான கருட சேவை உற்சவத்தை முன்னிட்டு  ஸ்ரீதேவி,ஸ்ரீதேவியுடன் உற்சவர் விஜயராகவப் பெருமாள் கோவிலிலுள்ள அலங்கார மண்டபத்தில் எழுந்தருளி அதன் பின் தங்க கருட வாகனத்தில்  சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு  பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதனையடுத்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய விஜயராகப்பெருமாளள்  இரு குடைகள் குடை சூழ,பக்தர்களின் கோவிந்தா கோவிந்தா என்ற பக்தி கர கோசங்களிடையே  கிராம வீதிகளில் தங்க கருட வாகனத்தில் திரு வீதி உலா  வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலித்தார்.அப்போது வழி நெடுங்கிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் கற்பூர தீபாராதனைகள் சமர்பித்து விஜயராகப்பெருமாளை வேண்டி விரும்பி சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.

மேலும்  தங்க கருட சேவை உற்சவத்தையொட்டி  வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும், அன்னதானங்களும்,அருட் பிரசாதங்களும் வழங்கப்பட்டது.

 



Leave a Comment