திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா...


காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக துவங்கியது.

கோயில் நகரமாக  காஞ்சிபுரம் அடுத்த திருப்புட்குழி கிராமத்தில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் குழந்தைப்பேறு அருளும் ஸ்ரீ மரகதவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் திருக்கோவிலில் பிரம்மோற்சவ விழா இன்று கொடியேற்றத்துடன்  வெகு விமரிசையாக துவங்கியது.

அதையொட்டி இன்று காலை விஜயராகப் பெருமாள்,  ஸ்ரீதேவி நாச்சியார் பூமாதேவி நாச்சியாருடன் கொடிமரம் அருகே எழுந்தருள  பிரமோற்சவ  கொடி ஏற்றப்பட்டு பிரம்மோற்சம் வெகு விமரிசையாக துவங்கியுள்ளது.

பிரம்மோற்சவத்தை யொட்டி இன்று மாலை ஹம்ச வாகனமும் ,  வெள்ளிக்கிழமை பிரசித்திப்பெற்ற கருட சேவை உற்சவமும், சனிக்கிழமை சேஷ வாகனமும், ஞாயிற்றுக்கிழமை நாச்சியார் திருக்கோளமும்,திங்கட்கிழமை 23ஆம் தேதி பல்லக்கு உற்சவமும், தீர்த்தவாரி உற்சமும்,வருகின்ற 21ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை புகழ்பெற்ற திருத்தேர் உற்சவமும் சிறப்புற நடைபெற உள்ளது.

மேலும் நாள்தோறும் காலை, மாலை வேலைகளில் பல்வேறு வாகனங்களில் எம்பெருமான் எழுந்தருளி திரு வீதி உலாவும்  நடைபெறுகிறது. இந்த பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி அறிவுரையின் பேரில் செயல் அலுவலர் தியாகராஜன்,  ஆய்வாளர் பிரித்திகா மற்றும்        திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் உற்சவர் கமிட்டியினர் செய்து வருகின்றனர்.



Leave a Comment