வாஸ்து காரியங்கள் செய்ய உகந்த திதி எது?


பிரதமை திதி

வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும்,திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும்.அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம்.உலோகம் கருங்கல் மரம் இவைகளில் சித்திரை வேலைகள் செய்யலாம்.கத்தி போன்ற ஆயுதங்கள் செய்யலாம்.மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அதிக உழைப்பு இருக்கும்.விட்டுக்கொடுத்து போகும் தன்மையுள்ளவர்களாக இருப்பார்கள்.அவசர புத்தி இருக்கும் அவசரமாக ஒரு காரியத்தை செய்வார்கள்.குலதெய்வ அனுக்கிரகம் குறைவாக இருக்கும்.வீடு வண்டி வாகனங்கள் அமையும்.அதில் பிரச்சனை இருக்கும். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.

துதியை திதி

அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை,ஆபரணங்கள் தயாரிக்கலாம்.விரதம்  இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம்.யாத்திரை செல்லலாம். இந்த திதியில் பிறந்தவர்களுக்கு விவசாயம் மற்றும் கால்நடைகள் மூலம் லாபம் உண்டு.வீடு வண்டி வாகன யோகம் உண்டு.தாய் பாசம் உடையவராக இருப்பார்.சுகவாழ்வு அமையும்.தந்தை சம்பந்தப்பட்ட உறவுகளில் பிரச்சனைகள் இருக்கும்.இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.

திருதியை திதி

குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இந்த திதியில் பிறந்தவர்கள் அதிகமாக பேசிக் கொண்டிருப்பார்கள்.மேடைப் பேச்சாளராக இருப்பார்.குழந்தைகளால் பிரச்சனை இருக்கும்.அரசு வழி ஆதாயம் உண்டு.சுய தொழிலில் இழப்பை சந்திப்பார்கள்.தந்திரசாலிகளாக இருப்பார்கள்.இதன் அதிதேவதை கௌரி பராசக்தி.

சதுர்த்தி திதி

முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.  இந்த திதியில் பிறந்தவர்களுக்கு பொருளாதாரப் பிரச்சினை இருக்கும்.அதிகமாக அலைச்சல் பட வேண்டியது இருக்கும்.விளையாட்டுகளில் ஆர்வம் இருக்கும்.சிறுவயதில் விபத்தை சந்திக்கலாம்.சதுரங்க விளையாட்டில் ஆர்வம் இருக்கும்.மணவாழ்வில் பிரச்சனை இருக்கும்.எளிமையாக இருக்க விரும்புவார்.சாப்பாட்டு ராமனாக இருப்பார்.எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில்  கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.சுப காரியங்களை தவிர்ப்பது நல்லது.

 



Leave a Comment