ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம்


ஸ்ரீபெரும்புதூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் மஹா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.

இத்திருக்கோயில் பராமரிப்பு திருப்பணிகள் கடந்த ஒரு வருடமாக நடைபெற்று வந்த நிலையில் 10 தேதி முதல் கணபதி ஹோமம் பூஜையுடன் கோயிலுக்கான குடமுழுக்கு விழா 3 கால பூஜைகளுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் பூஜைகள் செய்யப்பட்டு மஹா பூரணாகதி செய்யப்பட்டது.

பின்னர் புனித நீரானது கோவில் கலசங்கள் மேல் ஊற்றப்பட்டு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் புனித நீரானது பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் மீது தெளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் காண்பிக்கப்பட்டது.

இந்த கும்பாபிஷேகத்தில் காஞ்சிபுரம், ஶ்ரீபெரும்புதூர், சென்னை, திருவள்ளூர், மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு அங்காளம்மனை தரிசித்தனர்.



Leave a Comment