ராதா ருக்மணி ஆலயத்தின் கும்பாபிஷேக விழா....
திருவள்ளூர் அருகே அயத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமைவாய்ந்த ராதா ருக்மணி ஆலயத்தின் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், வேப்பம்பட்டு அடுத்த அயத்தூர் கிராமத்தில் பிரசித்தில் பெற்ற ஸ்ரீ வலம்புரி விநாயகர் ஆலயம், ஸ்ரீ நாகவள்ளி ஆலயம் மற்றும் ஸ்ரீ ராத ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த ஆலயம் தற்போது ஊர் பொதுமக்களால் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோ பூஜையுடன் துவங்கிய இந்த விழா இன்று நான்காம் கால யாகசாலை பூஜையுடன் பூர்னாதி செய்யப்பட்டது. பின்னர் வேத விற்பனர்கள் மந்திரங்கள் முழங்க மங்கள வாந்தியங்களுடன் புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Leave a Comment